படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்: நடிக்கும் நாகப்பாம்பை பார்த்ததுண்டா

உலகின் மிகப்பெரிய நாடக பாம்பு! நெருங்கி வந்தால் கொத்தாது... செத்தது போல நடிக்கும்... பாம்பா பழுதா என்ற கேள்விக்கு பதிலாக பாம்பு இறந்துவிட்டதோ என்று தோன்றும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 5, 2022, 11:26 PM IST
  • பாம்பென்றால் படையும் நடுங்கும்; ஆனால் இந்த பாம்பு நடிக்கும்...
  • நடிக்கும் பாம்பை சீண்டும் மனிதன்
  • நிறம் மாறும் பாம்பு
படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்: நடிக்கும் நாகப்பாம்பை பார்த்ததுண்டா title=

Snake Drama Video: நடிகர்களையும் மகா நடிகர்களையும், மெகா நடிகர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால் பாம்பு நடிப்பதை, அதுவும் மனிதனிடம் நடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆச்சரியமான டிராமா பாம்பு என்பதால், அதன் நடிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

பாம்பின் நடிப்பை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பலவும் வித்தியாசமானவை. அதிலும் பாம்புகளின் வீடியோ திகைக்க வைப்பவை; திகிலூட்டுபவை.

ஆனால் இந்த பாம்பு வீடியோ அதிசயப்பட வைக்கிறது. இப்படி எப்படி நடிக்க முடியும் என்று திகைக்க வைக்கிறது. இந்த வீடியோவில் பாம்பு இறந்தது போல நடிப்பதை பார்க்கலாம். அதிலும், மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனிதன் வரும் சத்தத்திற்குப் பிறகு பாம்பு இறந்து கிடப்பதைப் போல நடிக்கிறது.

பாம்பை பார்த்ததும் உடல் சிலிர்க்கிறது. பல்வேறு வகையான பாம்புகளை பார்த்திருக்கலாம். இணையத்தில் பாம்புகளின் வீடியோக்கள் அதிக அளவில் வைரலானாலும், இந்த டிராமா பாம்பு வீடியோ சிரிப்பையும் வரவழைக்கிறது.

இந்த வீடியோவில் காணப்படும் பாம்பை விட அதிகமாக நடிக்கும் பாம்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

ஆபத்தான பாம்பு ஒன்று எங்கோ செல்வதை வீடியோவில் காணலாம். அப்போது மனிதர் ஒருவர் வரும் ஓசை கேட்கிறது. அந்த மனிதரால் தனக்கு ஆபத்து வரலாம் என்று பாம்பு உணர்ந்தவுடன், அது அப்படியே தலைகீழாக மாறி, செத்துக் கிடப்பதுபோல் படுத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க | Viral Video: மரணம் நெருங்குவதை அறியாமல் பாம்பிடம் சிக்கி பலியான எலி

அங்கு வந்த அந்த நபர் பாம்பை எடுத்து தனது உள்ளங்கையில் வைப்பதை நீங்கள் காணலாம், ஆனால் அப்போதும் அந்தப் பாம்பு செத்தது போலவே நடித்துக் கொண்டு படுத்திருக்கிறது.

அந்த நபர், அதை நேராக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், பாம்பு அசையாமல் இறந்தது போலவே படுத்திருக்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

@earthpix)

 

நடிப்பில் உறுதியாக இருக்கும் பாம்பு 

நடிக்கும் பாம்பின் வீடியோ சமூக ஊடக பயனர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோ எர்த்பிக்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளி மிகவும் ஆச்சரியமானதாக இருப்பதால் பார்ப்பதற்கே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ

பெரும்பாலான பயனர்கள் பாம்பின் நடிப்பு செம என்று பாராட்டுகின்றனர். இந்த வீடியோவுடன் பதியப்பட்டுள்ள வாசகங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

செத்து விளையாடும் பாம்பு. இந்தப் பாம்பு  eastern hognose வகை பாம்பு.இது ஏன் இறந்து விளையாடுகிறது?

உயிர்வாழ்வதற்கான ஒரு பொறிமுறையாக இந்த பாம்பு இப்படி செத்து செத்து விளையாடுகிறது. யாராவது வந்தால், அவை இறந்துவிட்டது போல நடிக்கிறது.

அதுமட்டுமல்ல, அவை துர்நாற்றத்தையும் வீசுகின்றன. துர்நாற்றம் வீசினால், பாம்பு இறந்து வெகு நேரமாகிவிட்டது என்று நினைத்து வேட்டையாடுபவர்கள் விட்டு விட்டு சென்றுவிடுவார்கள்.

இப்படி குயுக்தியாக செயல்பட்டு பாம்பு உயிர் பிழைத்துக் கொள்கிறதாம்!  

மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News