வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு பேணுவது என்று அவற்றுக்கும் தெரியும். விலங்குகளுக்கு இடையிலான அற்புதமான பிணைப்பைக் கண்டு மக்கள் பல நேரங்களில் திகைத்து நிற்கிறார்கள். இவற்றை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. 


இதுபோன்ற ஒரு அற்புதமான பிணைப்பின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் சில குரங்குகளுக்கு இடையே ஆழமான அன்பு காணப்படுகிறது. வீடியோவில் இந்த குரங்குகளுடன் அவற்றின் உரிமையாளருக்கு இருக்கும் பிணைப்பும் ஆச்சரியமாக இருக்கிறது. வீடியோவில், அனைத்து குரங்குகளும் தங்கள் எஜமானருக்குப் பின்னால் ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டி அமர்ந்திருக்கும் விதம் பார்க்க மிக நன்றாக உள்ளது. குரங்குகள் இந்த பைக் பயணத்தை ரசிப்பது வீடியோவை பார்த்தால் தெரிகிறது. 


குரங்குகளின் ஜாலியான பைக் பயண வீடியோவை இங்கே காணலாம்: 



மேலும் படிக்க | கடவுளே! மொட்டை மாடியில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


பைக்கில் உலா வரும் ஐந்து குரங்குகள் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், சில குரங்குகள் தங்கள் உரிமையாளருடன் பைக்கில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. நான்கு குரங்குகளும் உரிமையாளருடன் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காணும்போது, ​​இந்தக் குரங்குகளுக்கு அவற்றின் உரிமையாளருடன் ஆழமான தொடர்பு இருப்பதை நன்றாக உணர முடிகின்றது. ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், அந்த நபர் பைக்கை ஓட்ட, பின்னால் அமர்ந்துள்ள ஐந்து குரங்குகளும் பின் இருக்கையில் அமர்ந்து ஆனந்தமாக சவாரி செய்கின்றன. பைக் சவாரியை குரங்குகள் மகிழ்ச்சியாக ரசிப்பது அவற்றின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. 


பொதுவாக குரங்குகள் பல வித குறும்புகளை செய்யும், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். எனினும், பைக் ஓட்டும் தங்கள் முதலாளிக்கு எந்த வித பிரச்சனையும் வராதவாறு, இந்த நான்கு குரங்குகளும் ஆடாமல் அசையாமல் அழகாக பைக்கில் அமர்ந்து செல்வது ஆச்சரியமாக உள்ளது. அந்த குட்டி பைக்கில் மிகவும் வசதியாக அட்ஜஸ்ட் செய்து, ஒன்றை ஒன்று அவை இறுகப் பிடித்துக் கொண்டுள்ளன.


வீடியோ வைரல் ஆனது 


இந்த வீடியோவை ட்விட்டரில் @hussain_tarana என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து அருகின்றன.  இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ‘இது ஒரு மிக அழகான வீடியோ’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘குரங்குகளுக்கும் மனிதனுக்குமிடையில் இருக்கும் அழகான உறவு இதில் தெரிகிறது’ என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | நாய்யிடம் அடாவடி செய்த குசும்புக்கார குரங்குகள்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ