முதலை போட்ட ஸ்கெட்சில் தப்பித்த மான்; வைரல் வீடியோ

முதலை ஒன்று போட்ட ஸ்கெட்சில் இருந்து மான் தப்பித்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2023, 03:09 PM IST
முதலை போட்ட ஸ்கெட்சில் தப்பித்த மான்; வைரல் வீடியோ title=

முதலை என்பது நீர் சிங்கம் என்று அழைத்தால் கூட பொருந்தும். ஏனென்றால் காட்டில் ராஜா என அழைக்கப்படும் சிங்கத்தைபோல், நீரில் தன்னுடைய ஆளுமையை செலுத்தக்கூடியது முதலை. இரைக்காக எப்போதும் காத்திருக்கும் அவற்றிடம் இருந்து தப்பிப்பது என்பதெல்லாம், இன்னொரு பிறவி எடுப்பதற்கு சமம் என்றே கூறலாம். அந்தளவுக்கு இரையை துல்லியமாக தாக்கி, வேட்டையாடகூடியது முதலை. சிங்கம், புலி, சிறுத்தை என்ற வேறுபாடெல்லாம் அதற்கு கிடையாது. தன்னுடைய பொறியில் சிக்கும் விலங்கு எதுவாக இருந்தாலும், அதனுடைய ஆயுசு அன்று அவ்வளவு தான். அந்தளவுக்கு ஷார்ப்பாக இருக்கும் முதலையிடம் இருந்து மான் ஒன்று தப்பித்துள்ளது. 

மேலும் படிக்க | என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ

ஆம், அசாத்தியமாக செயல்பட்டு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்ட அந்த மான், அடுத்த பிறவி எடுத்ததுபோல் துள்ளிக் குதித்து ஓடுகிறது. ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், மான் ஒன்று ஆற்றை கடக்க நீரில் இறங்கி நீந்த தொடங்குகிறது. அது கொஞ்சம் தொலைவு சென்றவுடன், திடீரென தண்ணீருக்குள் இருந்த முதலை நீருக்கு மேலே தென்பட்டு, மானை பார்க்கிறது. உடனே, அந்த மானை வேட்டையாடிவிட வேண்டும் ஆசையில் மானை துரத்த தொடங்குகிறது. வேகமாக செல்லும் முதலை, மானுக்கு மிக அருகில் சென்று அதனுடைய கழுத்தை கவ்வுகிறது.

ஆனால், மான் சாதுரியமாக குதித்து கழுத்தில் கவ்வியிருக்கும் முதலையை மீண்டும் நீருக்குள்ளே தள்ளுகிறது. கீழே விழுந்த முதலை மீண்டும் சுதாரிப்பதற்குள் கரையை தொட்டுவிடும் மான், அடுத்த பிறவியை பெற்றதுபோல் ஜெட் வேகத்தில் துள்ளிக் குதித்து ஓடுகிறது. இந்த அசாத்திய காட்சியை ஆற்றுக்குள் இருந்த கேமரா குழு ஒன்று அழகாக படம் பிடித்துள்ளது. மான் தப்பித்தவுடன், அந்த கேமரா குழுவினரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். காண்போரையே சில நிமிடம் பதைபதைப்புக்குள்ளாக்கும் இந்த வீடியோவை, ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் பகிர்ந்து அந்த பதிவின் கேப்சனில், " முதலையின் பிடியிலிருந்து இலாவகமாக தப்பிய மான். உறுதியாக முடியும் என்ற முயற்சியுடன் செயல்படுங்கள்" என்ற நம்பிக்கூயூட்டும் வரிகளையும் எழுதியுள்ளார். அதாவது இலக்கை நோக்கி பயணிக்கும் யாராக இருந்தாலும், இந்த வீடியோவை பார்க்கும்போது நிச்சயம் அவர்கள் முன் இருந்த தடையை உடைத்தெறியக்கூடிய புதிய தெம்பும், ஆற்றலும் பிறக்கும்.

மேலும் படிக்க | தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்ளும் எலோன் மஸ்க்! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News