வைரல் வீடியோ: உணவு என்பது வாழ்வின் அடிப்படை ஆகும். உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தாலும் சரி, வாழ்வதற்காக சாப்பிடுபவர்களாக இருந்தாலும் சரி, விலங்கோ மனிதனோ எந்த உயிரினமாக இருந்தாலும் உணவு அத்தியாவசியமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவைத் தேடுவதே வாழ்க்கை என்ற காலத்தில் இருந்து மனிதர்கள் நூறு சதவிகிதம் வெளிவந்த நிலையில் பெரும்பாலும் பிற உயிரினங்கள் உணவை தேடுவதே வாழ்க்கை என்று இயல்பான வாழ்க்கையை வாழ்கின்றன.


மனிதனோ, விலங்கோ உணவுக்கும் பிற தேவைகளுக்கும் அறிவும் சாதுர்யமுமாக செயல்பட வேண்டியிருக்கிறது.சரியான சந்தர்ப்பத்தில் வெளிப்படும் இயல்பான செய்ல்கள் மூலமே ஒருவரின் புத்திசாலித்தனமும், சமயோஜிதமும் வெளிப்படுகிறது.


மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு


விலங்குகளின் புத்திசாலித்தனம் அவற்றின் தற்காப்பு, தாக்குதல் மற்றும் இரை தேடல், அதை பத்திரப்படுத்துதல் என்பதில் இருக்கிறது. ஆனால் அவற்றை நாம் நேரடியாக பார்க்க முடிவதில்லை. 


ஆனால் இன்றைய நவீன யுகத்தில் மனிதன் கண்டறிந்திருக்கும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இயந்திரங்கள் மூலமாக அற்புதமான மற்றும் காண முடியாத தருணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.


பதிவு செய்யப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் அழகாகவும் அற்புதமாகவும் இருக்கின்றன. அவை இணையத்தில் வெளியாகும் போது பலரும் பார்த்து ரசிக்கின்றனர்.


மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் சில, நாம் இதுவரை பார்க்காத வேற லெவல் வீடியோக்களாக இருக்கின்றன.


வைரலாகும் வீடியோக்களில் பலவிதமான விலங்குகளின் குறும்புகளும், சேட்டைகளும் வெளிப்படுகின்றன. இதுபோன்ற விஷயங்களை பார்ப்பது அபூர்வம் என்பதால், நேரில் பார்த்தவர்கள் அவற்றை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர். அவை உடனடியாக வைரலாகின்றன


விலங்குகள் என்றால், சிங்கம், சிறுத்தை, புலி, யானைகள் மட்டுமா? அணில், மயில், குயில், குரங்கு, பாம்பு, கழுதை என பலவிதமான உயிரினங்களின் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகின்றன.


மேலும் படிக்க | Wise Donkey கற்பூர புத்தி கொண்ட புத்திசாலி கழுதை


அண்மையில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் அணில் செய்யும் சேட்டை மனதை இலகுவாக்குகிறது. இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட உடனே பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்து லைக் செய்திருக்கின்றனர்.


அப்படி என்ன வித்தியாசமாய் அந்த வீடியோவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நீங்களே பார்த்து ரசியுங்கள்



ஆச்சரியமாக இருக்கிறதா? தனது சுட்டித்தனத்தால் பார்ப்பவரை மனம் கொள்ளை கொள்ளும் அணிலின் வேர்க்கடலை மறைக்கும் செயல் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.


அணிலின் அவசரமும், வேறு யாராவது வந்து வேர்க்கடலையை எடுப்பதற்கு முன்னதாக மறைத்துவிட வேண்டும் என்ற வேகமும், அதை செய்யும் முறையும் சிரிப்பை வரவழைக்கிறது.


மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்


 குட்டிக் குட்டியான செயல்கள் தான், ஆனால் அது நம்மை சிரிக்க வைக்கிறது. ஆனால் அணிலைப் பார்த்து நாம் ரசிக்கிறோம் என்பது அதற்கு தெரியாது. அதனால் அது தன்னிச்சையாக வேர்க்கடலையை மறைக்கப் பார்க்கிறது. அணிலின் உடலோ சிறிது, அதற்கு எத்தனை கடலைகளை மறைக்க முடியும்?


வாயில் போட்டு ஒரு கடலையை பதுக்கிய அணில், அடுத்த கடலையை எப்படி போடப்போகிறது?  இந்த ஆச்சரியமான கேள்வி பார்க்கும் உங்களுக்கும் வந்ததா?  


இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையும், வித்தியாசமான வீடியோக்களையும் பதிவேற்றுவதில் பிரபலமான @buitengebieden என்ற டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த அணிலின் குறும்பு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR