ஜாக்கிசான் போல காற்றில் பாய்ந்த தேவாங்கு! வைரல் வீடியோ!
தரையில் அமர்ந்திருக்கும் தேவாங்கு ஒன்று உணவை பிடிக்க தாவி குதிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவாங்குகள் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை, இவை இரவில் தான் இரையை தேடி உண்ணும். இவை மனிதன் மற்றும் குரங்கின் அமைப்பை கொண்டதாக இருக்கிறது. தற்போது இந்த வகை உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளது, இவற்றின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மருத்துவ தன்மை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தேவாங்குகளின் சில அறிய காட்சி தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | யார் பலசாலி.. வா மோதி பாத்திரலாம்.. சீசாவில் மோதிக்கொள்ளும் ஆடுகள்!
ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் தேவாங்கின் வீடியோ காண்போரை ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறது. டாக்டர். சம்ரத் கௌடா என்பவரது ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், தரையில் கட்டிலுக்கு அருகே குட்டியாக இரண்டு தேவாங்குகள் அமர்ந்து இருப்பதை காணலாம். அவற்றிற்கு அருகே ஒருவர் கையை மேலே தூக்கியவாறு கையில் ஒரு உணவை பொருளை கொண்டு நிற்கிறார். அந்த உணவு பொருளை எப்படியாவது கைப்பற்றவிட வேண்டும் என்கிற நோக்கில் கீழே தரையில் அமர்ந்திருந்த இரண்டு தேவாங்குகளில் ஒரு தேவாங்கு வேகமாக துள்ளி குதித்து அவர் கையில் அமர்ந்து அதிலிருந்த உணவுப்பொருளை உண்ணுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பதினேழாயிரத்திற்கும் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவுடன் 'வாவ்! வாட் எ ப்ரீஷியஸ் ஜம்ப்' என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது. தேவாங்கின் இந்த அறிய செயலை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் என்ன ஒரு அருமையான காட்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR