குதூகலப்படுத்தும், சுவாரஸ்யமான விளையாட்டுகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். வேலைக்கு சென்றுவிட்டு வந்தால் கொஞ்ச நேரம் ரிலாக்ஷாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்படியான வீடியோக்கள் தான் என்டர்டெயின்மென்ட். பார்ப்பதற்கு ஜாலியாகவும் சிரிக்க  வைக்கும் வகையில் இருக்கும் வீடியோக்களை தேடி தேடி பார்ப்பார்கள். அந்த வீடியோக்களுக்கு முற்றிலும் மாறாக ஒருவர் எதை செஞ்சாலும் அவுட் என்ற ஒரு கேம் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. என்னடா இது எதை செய்தாலும் அவுட் என்றால், ஒருவர் எப்படி தான் விளையாட்டை விளையாடி ஜெய்கிறது என்பது உங்களுடைய கேள்வி என்றால், அது தான் இந்த விளையாட்டின் டிவிஸ்டே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


ஆனால் மிகவும் சிம்பிளான விளையாட்டு தான். வீடியோ பார்த்தால் அட இதுதானா... என எண்ணிவிடுவார்கள். ஆனால், இந்த ஐடியாவை வேறொரு பார்மேட்டில் விளையாடிருப்பார்கள், அதனை அப்படியே உல்டா செய்து செம காமெடியாக மாற்றிவிட்டார்கள். விளையாட்டின் அடிநாதம் என்றால் எஸ் சொல்லும் போது எஸ் பக்கம் இருக்க வேண்டும், நோ சொல்லும்போது நோ பக்கம் இருக்க வேண்டும். எஸ் சொல்லும்போது நோ பக்கம் இருந்தால் அவுட். நோ சொல்லும்போது எஸ் பக்கம் இருந்தால் அவுட்.



இதனை ஒரு குரூப்பாக விளையாடும்போதும் செம ஹேப்பியாக இருக்கும். இந்த வீடியோவிலும் ஒரு குரூப் தான் விளையாடுகின்றனர். நடுவே ஒரு கோடிட்டு இரண்டு புறங்களிலும் எஸ் மற்றும் நோ என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அது விளையாடுபவர்களுக்கு தெரியாது. முன்னால் இருப்பவர் எஸ் மற்றும் நோ சொல்லும்போது அதற்கு சரியான இடத்தில் குதித்து நிற்க வேண்டும். தவறாக செய்பவர்கள் அவுட். சிலர் தவறாக செய்யும்போது செம காமெடியாக இருக்கிறது. அப்படி அவுட்டானவர்களுக்கு தண்டனையும் இருக்கிறது. அந்த தண்டனையும் செம காமெடியாக இருக்கிறது. இந்த வீடியோ தான் இப்போது இண்டர்நெட்டில் டிரெண்ட். 


மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ