வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் பற்றிய வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள், வெளியிடப்பட்டவுடன் வைரல் ஆகி விடுகின்றன. இவற்றின் வித்தியாசமான பாணி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதியவர்களின் பல வீடியோக்களை நாம் இணையத்தில் காண்கிறோம். சிலவற்றில் இவர்கள் அட்டகாசமாக நடனமாடுவதையும், சில வீடியோக்களில் இவர்களது மாஸ் பாணியையும் கண்டுகளிக்கிறோம். 


இப்போதும் இதே போன்ற ஒரு விடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் இரு முதியவர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மேடையில் நடத்தும் இசை நிகழ்ச்சியை பார்த்து யாராலும், சிரிக்காமல், மனம் மகிழாமல் இருக்க முடியாது. இவர்களது பர்ஃபார்மன்சை பார்த்து கை தட்ட துவங்கியவர்கள் அதை நிறுத்தவே இல்லை என கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | சோப்பு, பிரஷ் போட்டு துணி துவைக்கும் குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் விடியோ 


மேடையில் மாஸ் காட்டிய தாத்தாக்களின் கூட்டணி


வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு வயதானவர்கள் இசை நிகழ்ச்சிக்காக மேடையில் அமர்ந்துள்ளதை நாம் காண்கிறோம். இந்த காட்சி வட மாநில கிராமத்தில் நடந்த நிகழ்வைப் போல தெரிகிறது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர், ஒரு முதியவர் மைக்கை பிடித்துக்கொள்கிறார். மற்றவர் ஹார்மோனியத்தை வாசிக்கத் தொடங்குகிறார். இருவரும் சேர்ந்து நடத்திய இசை நிகழ்ச்சியில் கச்சேரி களை கட்டுகிறது. இவர்களது நிகழ்ச்சியினால் பிறந்த உற்சாகத்தால் நிகழ்ச்சியை காண வந்த அனைவருக்கும் குதூகலம் பிறக்கிறது. அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது. 


முதியவர்களின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த இசை நிகழ்ச்சியில், இரு தாத்தாக்களின் பாடல் மற்றும் வாத்திய இசை என்னவோ மிக நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அது ஒரு பக்கம் இருக்க, அவர்களது ஸ்டைல், முக பாவங்கள், எக்ஸ்பிரஷன், அனைத்தும் படு மாஸாக இருந்தன. அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஈட்பாட்டை அவர்களது முக பாவங்கள் மூலம் நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்!! அப்படி ஒரு டெடிகேஷன்!!


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் reels_parivaar என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 4.5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். முதியவர்களின் அர்ப்பணிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 


மேலும் படிக்க | பூனைக்கு GYM TRAINER-ஆக மாறிய சிறுமி... வைரலாகும் வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ