Funny Viral Video: பணத்தால் வாங்கக்கூடிய அனைத்து ஆடம்பரங்களுக்கும் மேலானது காதல் என்று உலகம் முழுவதும் கூறப்படுகிறது மற்றும் நம்பப்படுகிறது. இந்த உலகத்தில் உள்ள முழு செல்வத்திற்காகவும் காதலர்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், என்ன வந்தாலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இது எப்போதும் உண்மையல்ல. மேலும் பணத்திற்காக தங்கள் காதலை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கும் நபர்களும் உள்ளனர். எது எப்படியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பணத்துக்காக ஒருவர் தனது காதலை கைவிட்டாரா இல்லையா என்பதை காட்டுகிறது. 


அந்த வீடியோவில், பூங்காவில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம், ஒரு இளைஞர்,'நீங்கள் காதலிக்கும் நபருடன் காதலை முறித்துக்கொண்டால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்' என கூறுகிறார். அதாவது, அவரிடம் காதலா, பணமா என தேர்வு செய்ய சொல்கிறார்.


மேலும் படிக்க | மேடையிலேயே அவிழ்ந்த மணமகனின் பேண்ட்: மணமகளின் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ


வைரல் வீடியோ:



அதற்கு அந்த பெண், ஐந்து வருடங்களாக தான் காதலிப்பதாகவும், பணத்துக்காக காதலனை விட்டு பிரிந்து செல்ல முடியாது என்றும் கூறுகிறார். முதலில், அந்த இளைஞர் ஒரு இரண்டாயிரம் ரூபாய் பணகட்டை மட்டும் வைத்திருந்தார். பெண்ணின் இந்த பதிலுக்கு பின், மேலும் ஒரு கட்டை வெளியில் எடுத்து, 'இப்போது சொல்லுங்கள் பணமா, காதலா' என்றார். தொடர்ந்து, அந்த பெண் பணத்தை மறுக்க, அவருக்கும் ஒவ்வொரு பணகட்டாக வெளியே எடுத்தார். 


ஒருகட்டத்தில், பணமா, காதலா என்ற கேள்வி மீண்டும் வந்தபோது, அந்த பெண், பணம் என பதிலளித்தார். ஆம், அந்த பெண் கூறியதில் ஏதும் தவறில்லையே. அந்த பெண், காதலில் உறுதியாகதான் உள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் பணம் வருவதால், காதலை விட்டுவிடுவதில் ஏதும் தப்பில்லையே. அதையேதான் அந்த பெண்ணும் செய்தார். 


அந்த பணம் மூலம், வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம் அல்லவா.  அந்த பெண் உணர்வுகளுக்கு இடமளிக்காமல், தனது புத்தியை பயன்படுத்தியதிருக்கிறார். மேலும் ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்பினால், அதில் தவறேதும் இல்லை, ஏனென்றால் அது அவரவரின் உரிமை.


ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பணம் நியாயமான வழிகளில் இருந்து வர வேண்டும். அதற்கு மக்கள் கடினமாக உழைக்க வேண்டும், நேர்மையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோ இதில் பல பாடங்களை பலருக்கு கற்றுக்கொடுக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: திருமண மேடையில் கட்டிபிடித்து உருண்ட மணமக்கள்... இதுதான் செல்ல சண்டையோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ