இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சில திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு சுவிட், கோல்ட் ட்ரிங்க், சாப்பிடுவதை நாம் கண்டுள்ளோம், ஆனால் குட்கா சாப்பிடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இங்கு இது போன்ற காட்சி ஒன்று தான் வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் இதில் மணமகளால் குட்கா சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.


மேலும் படிக்க | ’டேய் இப்படி வாங்கடா’ குட்டிகளுக்கு சாலையை சொல்லிக் கொடுக்கும் அம்மா யானை - வைரல் வீடியோ


கணவன் முன் குட்கா சாப்பிட்ட பெண்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகனும், மணமகளும் ஒன்றாக நினருப்பதையும், இருவரும் மணக்கோலத்தில் ஜோடியாக இருப்பதையும் வீடியோவில் காணலாம். வீடியோவை ஒரு முறை கவனமாகப் பார்த்தால், ஒரு கணம் ஆச்சரியடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோவில், மணப்பெண் கையில் குட்காவுடன் இருப்பதை காணமுடிகிறது. அவர் துளியும் யோசிக்காமல் குட்கா சாப்பிடுகிறார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மணமகன் தன் எதிரில் நின்றுக் கொண்டு இருக்கும் போதே இது போன்ற செயலை அவர் செய்கிறார். இந்த வீடியோ அங்கிருந்த யாரோ ஒருவர் ஒளிந்திருந்து எடுத்தது போல் தெரிகிறது.


வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்: 



வீடியோ வைரல் ஆனது, கமெண்டுகளை அள்ளி வீசும் இணையவாசிகள்


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்


மேலும் படிக்க | சிங்க குட்டிகளை கொஞ்சி விளையாடும் சிம்பன்சி - வைரல் வீடியோ


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ