’டேய் இப்படி வாங்கடா’ குட்டிகளுக்கு சாலையை சொல்லிக் கொடுக்கும் அம்மா யானை - வைரல் வீடியோ

தன்னுடைய யானை குட்டிகளை அழகாக சாலையை கடக்க கற்றுத் தரும் அம்மா யானையின் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2023, 10:47 PM IST
  • யானைகள் வீடியோ வைரல்
  • குட்டிகளுக்கு சொல்லி கொடுக்கிறது
  • ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ
’டேய் இப்படி வாங்கடா’ குட்டிகளுக்கு சாலையை சொல்லிக் கொடுக்கும் அம்மா யானை - வைரல் வீடியோ title=

வன விலங்குகளில் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கது யானைகள். ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வன விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு யானைகள். யானைகள் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் கொண்டவை. யானைகளின் வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும்போதுதான், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் நடக்கிறது. 

மேலும் படிக்க |  தலைக்கேறிய போதை.. கல்யாண வீட்டில் நடந்த காமெடி சம்பவம்: வீடியோ வைரல்

சூழலியலாளர்கள் காட்டை பாதுகாப்பது யானைகள்தான் என்று கூறுகிறார்கள். வனவிலங்குகள் பற்றி மனிதர்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கிறது. வனவிலங்குகளை நெருங்கிப் பார்க்க முடியாது என்பதால்தான், வன விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பாரிவையாளர்களை ஈர்த்து வைரலாகின்றன.

இந்த வனத்துறை அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் வனவிலங்குகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இத்தகைய வீடியோக்கள் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிந்தலையும் ஏற்படுத்துகின்றன. அண்மையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தாய் யானை குட்டி யானைக்கு எப்படி சாலையைக் கடப்பது என்று கற்றுக் கொடுக்கிறது. இது ஒரு சோக யதார்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சந்தானராமன் என்பவர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதர்கள்தான் சாலையைப் பாதுகாப்பாக கடப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், மனிதர்களின் நடவடிக்கையால் யானைகள் கூட சாலையை எப்படி பாதுகாப்பாக கடப்பது என்று கற்றுக்கொள்வது உண்மையில் ஒரு சோகம்தான். 

மேலும் படிக்க | 'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News