Crocodile Video: முதலையிலிருந்து நீருக்கடியில் பதுங்கியிருந்து வேட்டையாடும் விலங்காகக் கருதப்படுகின்றன. பூமியிலுள்ள மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்று முதலைகள், காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தையும் எளிதாக வேட்டையாடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரின் கரையில் பதுங்கியிருந்து வேட்டையாடுவதில் முதலைகள் மிகவும் புத்திசாலித்தனமான வேட்டையாடும் விலங்காக கருதப்படுகிறது. இருப்பினும் இங்கு ஒரு ராட்சத முதலை (Giant Crocodile) ஆச்சர்யப்படும் வகையில் ஒன்றை செய்துள்ளது.


ராட்சத முதலை தனது சக முதலையை வேட்டையாடுவதை வீடியோவில் காணலாம். வீடியோவைப் பார்த்ததும் தண்ணீருக்குள் மறைந்திருந்த முதலை, கரைக்கு வந்த சிறு முதலையை தாக்குவது தெரியும். முதலை குட்டியின் வாலைப் பிடித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சிறிது நேரத்தில் அந்த குட்டி முதலையை தன் தாடையில் பிடித்து தண்ணீருக்குள் கொண்டு செல்கிறது ராட்சத முதலை. தற்போது அந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது.


ALSO READ |  Watch Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி; இது காதலா; இல்லை ஊடலா!


ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு முதலை ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. பொதுவாக முதலைகள் வெப்ப மண்டலங்களில் உள்ள ஆறுகள், ஏரிகளில் வாழ்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.


முதலைகள் இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. தற்போது 13 வகையான முதலைகள் உள்ளன. முதலைகள் பொதுவாக இறைச்சியை மட்டுமே சாப்பிடும். முதலைகளின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் வரை இருக்கும் எனவும் 6-8 வயதில் பெருக்கத் தொடங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. 


 



ALSO READ |  போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR