சிங்கத்தை சின்னாபின்னமாக்கிய ஒட்டகச்சிவிங்கி: வியக்க வைக்கும் வைரல் வீடியோ
Giraffe Lioness Fight: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. வியக்க வைக்கும் மிருகங்களின் சண்டை வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பெரும்பாலான காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களில் சிங்கம், சிறுத்தை, புலி ஆகியவை மற்ற விலங்குகளை வேட்டையாடுவதையே நாம் பார்க்கிறோம். இந்த விலங்குகளும் தாக்கப்படும் நிகழ்வுகள் மிகக்குறைவே. ஆனால் தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சிங்கத்துக்கும் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கும் இடையில் காட்டில் நடக்கும் ஒரு குட்டி யுத்தத்தை காண முடிகின்றது.
மேலும் படிக்க | பாம்பு வாங்கிய பல்பு, மாஸ் காட்டிய குழந்தை: திகிலூட்டும் வைரல் வீடியோ
சிங்கத்தை கலங்கடித்த ஒட்டகச்சிவிங்கி
வீடியோவின் துவக்கத்தில் சிங்கம் இரை தேடி காட்டில் அலைந்து கொண்டிருப்பதை காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து, அதன் பார்வை ஒட்டகச்சிவிங்கி மீது விழுகின்றது. சிங்கம் அதை தாக்க தயாராகிறது. ஆனால், அது துள்ளிக் குதித்து தாக்க தயாராகும்போது ஒட்டகச்சிவிங்கியின் காலடியில் மாட்டிக்கொள்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஒட்டகச்சிவிங்கி அதை பலமுறை உதைத்து காயப்படுத்துகிறது. வேட்டையாட வந்த சிங்கம் வசமாக மாட்டிக்கொள்கிறது.
சிங்கம் அடிபடும் வீடியோவை இங்கே காணலாம்:
இணையத்தில், பல வீடியோக்களில் நாம் சிங்கம் பிற விலங்குகளை வேட்டையாடுவதை கண்டுள்ளோம். ஆனால் இந்த வீடியோவில் சிங்கம் வசமாக மாட்டிக்கொள்வதை காண முடிகின்றது. சிங்கம் மற்றும் ஒட்டகச்சிவிங்கி தொடர்பான இந்த வீடியோ animalcoterie என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ