பயங்கர மலைப்பாம்புடன் பந்தாவா விளையாடும் சிறுமி: ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
Snake Viral Video: ஒரு பெண் குழந்தை மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் உள்ளது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
பொதுவாகவே பாம்புகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இவை விரைவில் வைரலும் ஆகின்றன. சமீபத்திலும் மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்தால் ஆச்சரியப்படுவதா அல்லது அச்சப்படுவதா என்பதே புரியவில்லை.
பொதுவாக மக்கள் பாம்புகளிடமிருந்து தூரமாக விலகி இருக்கவே விரும்புகிறார்கள். அதுவும் மலைப்பாம்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். இவற்றால் வரும் ஆபத்தை பற்றி நினைத்தால் கூட நமக்கு கதி கலங்கும். ஆனால், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், ராட்சத மலைப்பாம்புடன் சிறுமி விளையாடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
இந்த நாட்களில் பல ஆபத்தான மற்றும் பயங்கரமான உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் போக்கும் உள்ளது. இந்த வரிசையில் சிலர் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பயங்கரமான விலங்குகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளான இந்த மிருகங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்பொது பகிர்கிறார்கள். இவை சமூக ஊடகங்களில் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.
மேலும் படிக்க | செங்குத்து மலையில் பனி சிறுத்தையின் மான் வேட்டை: வைரல் வீடியோ
மலைப்பாம்புடன் விளையாடும் பெண்
சமீபத்தில் அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இது பல சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுமி ஒரு மஞ்சள் நிற ராட்சத மலைப்பாம்புடன் வீட்டில் விளையாடுவதைக் காண முடிகின்றது. பாம்பு சிறுமியுடன் விளையாடும்போது, அது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஒரு தருணத்தில் மலைப்பாம்பு நேரடியாக சிறுமியின் முகத்தில் விழுந்து முத்தமிடுவதையும் காண முடிகின்றது. பாம்பு தன்னை கொஞ்சி குலாவும் நேரத்தில் அந்த சிறுமி சிறிதும் அச்சப்படவில்லை. அவர் அதை மிகவும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பலர் அதிசயிக்கும் வகையிலும் இது உள்ளது.
வீடியோவைப் பார்த்த பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்
இந்த வைரலான வீடியோ @TheFigen_ என்ற கணக்கிலிருந்து ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான வியூஸ்களையும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | Viral Video: நீ பயங்கர நாக பாம்பா இருக்கலாம்... ஆனா நாங்க பாலைவனக் கீரிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ