மலைப்பாம்புடன் ஒரு டின்னர் டேட்: அசத்தும் பெண், வியக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்
Python Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் நம்ப முடியாது. மலைப்பாம்பின் விசித்திரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
நாம் அனைவருமே பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம். ஆனால், பாம்புகளுடன் மிக இயல்பாக சிறிதும் அச்சம் இல்லாமல் பழகும் பலரும் உள்ளனர். பாம்புகளுடன் அச்சமில்லாமல் பழகும் பலரது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சிலரோ பாம்புகளை செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள். சிலர் அதற்கு ஒரு படி மேலே போய், அவற்றை தங்களுடன் பொது இடங்களுக்கு அழைத்துச்செல்கிறார்கள்.
இதேபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் இரு பெண்கள் ஒரு பெரிய மலைப்பாம்பை தங்களுடன் டின்னர் உணவு அருந்த ஒரு பெரிய உணவகத்துக்கு அழைத்துச்சென்றிருப்பதை காண முடிகின்றது.
மேலும் படிக்க | Two Head Cobra: இரட்டைத் தலை பாம்பைப் பார்த்தால் என்னவாகும்? வீடியோ வைரலாகும்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் படி, இரு பெண்கள் இரவு உணவு உட்கொள்ள ஒரு உணவகத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்களுடன் ஒரு பெரிய மலைப்பாம்பையும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். உணவு டேபிளுக்கு முன்னால் இரண்டு பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள். பாம்பு மேசையில் அமர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் இருவரும் உணவை ஆர்டர் செய்துவிட்டு பணியாளருக்காக காத்திருக்கிறார்கள். பாம்பும் உணவுக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையில் உணவு வருகிறது.
ஒரு பெண் சாப்ஸ் டிக் உதவியுடன் உணவை எடுத்து அதை பெரிய மலைப்பாம்புக்கு ஊட்டுகிறார். பெண் கொடுக்கும் உணவை பாம்பு இழுக்கிறது. இந்தக் காட்சியைக் கண்டு உணவகத்தில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர். பாம்பு உணவகத்தில் யாரையும் எதுவும் செய்யவில்லை. பாம்பென்றாலே அனைவரும் அஞ்சி ஓடும் நிலையில், பாம்பை சர்வ சாதாரணமாக உணவகத்துக்கு அழைத்து வந்து, அதற்கு உணவு ஊட்டும் பெண்களை பார்த்து இணையவாசிகளும் அதிர்ந்துள்ளனர்.
அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ ilhanatalay_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட ஒரு லட்சம் வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித லைக்குகளையும் அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | Viral Video: தண்ணிக்குள்ளயும் லந்து பண்ணுவியா? ஆச்சரியம் ஏற்படுத்தும் ஜாகுவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ