விநாயகர் சதுர்த்திக்காக 18 அடியில் தங்கப் பிள்ளையார் சிலை! 21 அடியில் தேங்காய் கணபதி
Swarna Ganesh Adorned With Gold in 18 Feet: 18 அடியில் கன கம்பீரமாக காட்சியளிக்கும் கனநாயகன் நவயுக கணபதி... இது பிள்ளையார் சதுர்த்தி உற்சவ கோலாகலம்
நொய்டா: 2022 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் சந்தௌசியில் 18 அடி உயரம் கொண்ட தங்க விநாயகர் சிலை செதுக்கப்படுகிறது. தும்பிக்கை கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் விநாயக சதுர்த்தி திருவிழாவை கொண்டாட பல தினங்களுக்கு முன்னரே ஆயத்தமாகிவிட்டனர். முழு முதல் கடவுள் கணபதிக்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அனந்த் சதுர்தசி அன்று முடிவடையும் 10 நாள் திருவிழாவை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 31, 2022 அன்று வருகிறது, அன்று தொடங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், செப்டம்பர் 9 வரை தொடரும். ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விநாயகப் பெருமானை தங்கள் வீட்டிற்குள் வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்திக்காக 18 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வடிக்கப்படுகிறது. ANI ஆல் பகிரப்பட்ட வீடியோவில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் சிலை தயாராகி வருவதை பார்க்கலாம்.
“18 அடி உயர சிலை கொண்ட விநாயகரின் சிலையை, திருப்பதி வெங்கடாஜலபதியை அலங்கரிக்கும் பாணியில் தங்க அலங்காரப் பொருட்களால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று சிலை வடிக்கும் குழுவைச் சேர்ந்த அஜய் ஆர்யா கூறினார்.
மேலும் படிக்க | விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு பிடித்த ராசிகள்
விநாயகர் சதுர்த்தி திருவிழா, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரும் புகழ் பெற்ற கணபதி உற்சவம், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பாடல்களைப் பாடி, பூக்களைச் சமர்ப்பித்து, பிரசாதம் வழங்கி, இறைவனை துதிக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் 18 அடி உயர பிள்ளையார் உருவாகி வருகிறார் என்றால், 7000 தேங்காய் கொண்டு 21 அடி உயர தேங்காய் கணபதியை சிங்கப்பூரில் உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூரில் சிவன் ஆலயத்தில் முதல் முறையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 7000 தேங்காய்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் எழுந்தருளி உள்ளார்.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ