Devotional: காரியத் தடைகளை போக்கி சித்தி அருளும் விக்ன விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 06:29 AM IST
  • காரியத் தடைகளை போக்க விநாயகர் வழிபாடு
  • பார்வதி மைந்தனை தரிசித்தால் துன்பம் தொலைந்தோடும்
  • நினைத்த இடத்தில் வணங்கக்கூடியவர் கணபதி
Devotional: காரியத் தடைகளை போக்கி சித்தி அருளும் விக்ன விநாயகர் வழிபாடு title=

விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.

வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே பார்த்தேன் என்று விரக்தியுடன் இருப்பவர்கள் கூட, விநாயகரை வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் செல்வ கணபதி.

வெற்றிகளைக் குவிக்கும் விநாயகரின் துணையுடன் வாழ்வை வெற்றிக் கொள்ளலாம்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 16ஆம் நாள், பங்குனி 03, செவ்வாய்க்கிழமை     

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்வது விசேஷம். எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடி, எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட விநாயகருக்கு, துளசி தீர்த்தம், சந்தனம், பன்னீர் என அபிஷேகம் செய்த பிறகு பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்கலாம்.

விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட, பித்தளைத் தாம்பாளத்தில் பச்சரிசி அல்லது நெல்லை விரவிவிட்டு, அதன்மேல் விநாயகரை வைத்து வழிபடலாம். தினசரி விநாயகருக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வேண்டுதல்களை சொல்லி பூஜித்தால் போதும். 

வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரியுமாறு விளக்கேற்றவேண்டும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி விநாயகரை துதித்தால், தும்பிக்கை முகத்தோன், வினைகளை அறுத்து, வாழ்வில் வளம் சேர்ப்பார்.

Also Read | 16 march 2021: இன்றைய ராசிபலன்; உங்கள் ராசி என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்ளுங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News