Viral Kandhrishti Video: சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் காலம் இது. இங்கு பகிரப்பட்டு ரசிக்கப்படும் வீடியோக்கள் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் மட்டுமல்ல, நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வீடியோ 


இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான அலல்து அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. அதிலும் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் விஷயமாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் மறந்து போன விஷயங்கள் பதிவிடப்பட்டால், அவை வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. இயல்பான வைரல் வீடியோக்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.


மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்‌ஷன்


வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அவை விலங்குகளின் மோதல், காதல், பாம்பு, சிங்கம் என நாம் பார்க்கவே முடியாத வீடியோக்கள் மட்டும் தான்  சமூக ஊடகங்களில் வைரலாகுமா? இல்லை என நிரூப்பிக்கிறது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் பாட்டியும் பேரனும் வீடியோ.


இந்த வீடியோவில் பெரிய அளவில் ஒன்றும் இல்லை. கிராமத்தில் நடக்கும் இயல்பான கண்ணேறு கழிக்கும் விஷயம் தான். ஆனால், அது மிகவும் இயல்பானதாக இருப்பதும், நாம் மறந்துபோன விஷயத்தை நினைவுபடுத்துவதாகவும் இருப்பதால் இந்த வீடியோவை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர்.  வைரலாகும் வீடியோவில் பாட்டி கண்ணேறு கழிக்க சொல்லும் வார்த்தைகள் பழைய நினைவுகளை கிளறிவிடுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



இந்த வீடியோவைப் பார்த்தால் அந்தக்கால நினைவுகள் மனதில் வந்து நெகிழ வைக்கின்றன.


மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?


பிறர் பார்வையால் படும் தோஷங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் களைவதை திருஷ்டி கழித்தல் என்று சொல்வார்கள். திருஷ்டி கழிப்பதை கண்ணேறு கழித்தல் என்றும் சொல்வார்கள்.


கடுகு, மிளகாய், உப்பு மற்றும் சிறிது தெருமண் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்கார வைத்து, ‘ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக்கண்ணு, நோய்க்கண்ணு, நொள்ளக் கண்ணு, கொள்ளிக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு, கண்டக் கண்ணு எல்லாம் கண்டபடி தொலையட்டும் என இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றிப் போடுவது வழக்கம்.


இப்படி, குழந்தையின் தலையை இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றவும். அதன்பிறகு, வலமிருந்து இடப்புறமாக மூன்று முறை சுற்றி, நெருப்பில் போட்டால், திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.  பாட்டி இப்படி வார்த்தைகளால் திருஷ்டி கழிக்கும் வார்த்தைகளை சொல்லிக் கொண்டே கண்ணேறு கழிப்பதை பார்க்க சுவராசியமாக இருக்கிறது.


மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ