பச்சோந்தி வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இந்த வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் ஆச்சரியப்படுத்துகின்றன. அதேசமயம், இவை அனைத்தும் உண்மையான வீடியோக்களா அல்லது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா என்ற கேள்விகளும் எழுகிறது. எது எப்படியிருந்தாலும், சிந்திக்க வைக்கும், ஆச்சரியப்பட வைக்கும், ஏன் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோக்கள் அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்க்கப்படும் வீடியோக்கள் வைரலாகின்றன. பொதுவாகவே, ஆக்கப்பூர்வமான விஷயங்களை விடவும், நேர்மறையான விஷயங்களை விடவும், வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கலுக்கு மவுசு உண்டு.


அந்த வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களை மக்கள் விரும்புகின்றனர். அதிலும் அதிக அளவில் விலங்குகளின் வீடியோக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன. நாம் யோசித்துக்கூட பார்க்காத விஷயங்களைப் பார்க்கும்போது, அது திகைப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்


ஆனால் உண்மையா, இல்லை உருவாக்கப்பட்டதா என்று கூட புரிவதில்லை.. நாம் நம்ப முடியாத பல விஷயங்களை பிற உயிரினங்கள்  செய்கின்றன. இவை நம்மை அதியசயிக்க வைக்கின்றன. பொதுவாக நாய், பூனை, குரங்கு, பாம்பு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு உள்ளது.


அதேபோல, வித்தியாசமான வீடியோகளுக்கென இணையத்தில் தனி ஈர்ப்பு உள்ளது. அதில் தற்போது அனைவராலும் விரும்பிப்பார்க்கப்படும் ஒரு வீடியோ பச்சோந்தியின் நிறம் மாறும் வியப்பான வீடியோ ஆகும். கலர்மாறும் கலர்ஃபுல்லான வீடியோவை பார்த்து மகிழுங்கள்.