இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் உள்ள ரசிகர் பட்டாளம், செல்ல பிராணிகளின் வீடியோக்களை கொண்டாடுகின்றன என்றால் அது பொய்யில்லை. மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை, பலதரப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன.


அதிலும், குரங்கு மற்றும் சிம்பன்சியின் குறும்பு வீடியோக்கள் பலரையும் கவர்கின்றன. ஒரு வீடியோவில், சிம்பன்சியின் உதவி செய்தவருக்கு நன்றி சொல்லும் அழகு அசர வைக்கிறது. உண்மையில் மனிதர்களிடம் இணக்கமாக நடக்கவே விலங்குகள் விரும்புகின்றன என்பதை காட்டும்  சம்பவம் இது


வைரலாகும் சிம்பன்சி வீடியோ: 


இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அழகிய வீடியோவை இதுவரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். நீங்களும் பார்த்து மகிழுங்கள்...



இந்த வீடியோவிற்கு லைக்குகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ!


இந்த வீடியோவில் வனத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற மனிதரை அழைத்து தனது தாகத்தை தணிக்கச் சொல்லும் சிம்பன்சியின் செயல்கள் நெகிழச் செய்கின்றன. சிம்பன்சி, மனிதனின் கைகளை பிடித்து, அங்குள்ள தண்ணீரை தானாகவே எடுக்க வைத்து, அதை குடித்து முடித்த பிறகு செய்வது தான் கிளாசிக் என்று சொல்லலாம்.


தனக்கு உதவி செய்த மனிதரின் கைகளை, பாங்காய் கழுவிவிடும் பாங்கு அசர வைக்கிறது. உண்மையில், இந்த வீடியோ மனதை மயக்கும் உதவி கோரும் சிம்பன்சியின் தன்மையையும், உதவியை வாங்கி விட்டு அப்படியே விட்டுவிடாமல், தான் வாய்வைத்து குடித்த கையை அலம்பி விடும் பாங்கு இருக்கிறதே! சிலிர்க்க வைக்கிறது.


சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால், இது போன்ற வீடியோக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து வைரல் வீடியோக்களில் முதலிடத்தை பிடிக்கின்றன.


மேலும் படிக்க | Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ