அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருகிறது, விலங்குகளின் வீடியோக்கள் தான் வெகு விரைவில் கவன ஈர்ப்பை பெற்று விடுகிறது. அதிலும் யானைகள் வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். உணவுக்காக அலைவது முதல் குட்டிகளை பத்திரமாக அழைத்துச் செல்வது வரை யானைகளின் வீடியோ காண்போரை ரசிக்க வைக்கும். அதன்படி இங்கு ஒரு யானையின் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் மசனகுடி பகுதியில் அறங்கேரியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகளுக்கு வனப்பகுதியில் சரியான தீவனம் கிடைக்காததால் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன. 


மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


இந்த நிலையில் மசனகுடி பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது குடி நீர் மற்றும் உணவை தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. அதன்படி மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள குப்பைத் தொட்டியில் காட்டு யானை ஒன்று அதில் கிடந்த உணவு கழிவுகளை உட்கொண்டது. அந்த குப்பைத் தொட்டியில் உணவைத் தேடி அதிலிருந்த பொருட்களை உண்ணும் காட்டு யானையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.