சமீபத்தில் தன் நடன திறமையின் மூலம் இணையத்தை கலக்கிய டேன்சிங் கோவிந்தா அங்கிள், பாலிவுட் பிரபலம் கோவிந்தாவுடன் நடனமாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நடனம் ஆடுவதற்கு வயதோ, உடல் பருமனோ ஒரு பொருட்டல்ல என்பதை நிருபிக்கும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் வசிக்கும் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா என்பவர் தனது நடன திறமையினை திருமண நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார். இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. 


46 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நடனம் என்றால் உயிர். தனது குடும்ப நிகழ்சி, மற்ற நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சியிலும் இவர் நடனம் ஆடுவது வழக்கம். இவர் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மிகப் பெரிய ரசிகர். இவர் கோவிந்தா போலவே இசைக்கு தகுந்த மாதிரி அசைந்து ஆடுகிறார். 


கடந்த மே மாதம் 12 ஆம் தேதி தனது மனைவியின் உடன்பிறந்த தம்பியின் திருமணத்திற்கு குவாலியர் இவர் சென்றிருந்தார். அங்கு அவர் நடிகர் கோவிந்தாவின் பாணியில் நடனமாடியது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ பார்த்த மத்திய பிரதேசதத்தின் முதல்-அமைச்சர்  சிவராஜ் சிங் சௌஹான் இவரை பாராட்டினது குறிப்பிடத்தக்கது.