மேடையில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
Funny Wedding Video: ‘அட..என்னப்பா, இந்த பையன் இப்படி செஞ்சிட்டானே’ என இணையவாசிகளை ஒரு வீடியோ கேள்வி கேட்க வைத்து வைரல் ஆகி வருகிறது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமூக ஊடகங்களில் திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவற்றில் மணமக்களின் வித்தியாசமான ஸ்டைல், மேடையில் நடக்கும் கிண்டல், கேலி, எதிர்பாராமல் நடக்கும் சில அதிர்ச்சி சம்பவங்கள், மணமக்களுக்கு இடையில் உள்ள காதல், மோதல் என பலவற்றை நாம் பார்த்துள்ளோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் மணமேடையில், அனைவர் முன்னிலையிலும் மணமகன் செய்யும் செயலால் மணமகள் செய்வதறியாமல் தவிப்பதை காண முடிகின்றது. இணையவாசிகள் பல வித திருமண வீடியோக்களை பார்த்திருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்க முடியாது.
மேலும் படிக்க | பாம்பை பிடிக்க குளத்தில் குதித்த இளைஞன்! பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ
விசித்திரமான செயலை செய்த மணமகன்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாலை மாற்றும் சடங்குக்காக மணமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மேடைக்கு வந்திருப்பதைக் காண முடிகின்றது. முதலில் மணமகள் மணமகனுக்கு மாலை அணிவித்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்குகிறார். அடுத்தது மணமகனின் முறை வருகிறது. அவர் முதலில் மணமகளின் கழுத்தில் மாலையை அணிவிக்கிறார். பின்னர் மணமகள் செய்ததையே பின்பற்றி, மணமகளின் கால்களைத் தொட்டு வணங்குகிறார். இதனால் மணமகள் ஷாக் ஆகிறார். மணமகனின் செயலால் மணமகள் மட்டுமல்லாமல், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
கல்யாண கலாட்டா வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோவை பார்த்தால், மணமகனுக்கும், மணமகளுக்கும் வயது மிகவும் குறைவு என்பது தெரிகிறது. மணமகன் மணமகள் செய்ததைப் போலவே தானும் செய்ய வேண்டும் என்று நினைத்து விடுகிறார். எனினும், அவரது இந்த செயலைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணம் தொடர்பான இந்த வேடிக்கையான வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | Viral Video: மிரட்டும் எலி... அஞ்சி நடுங்கும் பூனை... இது தான் ரியல் Tom & Jerry!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ