உயிரை பணயம் வைத்து நாயை காத்த நாயகன்: மனதை தொட்ட வைரல் வீடியோ

Viral Animal Video: ‘அந்த மனசுதாங்க கடவுள்...’ என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டு இருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 20, 2022, 12:57 PM IST
  • தன்னலம் கருதாமல் செய்யப்படும் உதவிதான் மனிதநேயத்தின் மிகப்பெரிய சான்றாக விளங்குகிறது.
  • இதை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
  • அப்படிப்பட்ட மற்றொரு வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உயிரை பணயம் வைத்து நாயை காத்த நாயகன்: மனதை தொட்ட வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மனிதநேயத்தைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். மனிதநேயம் என்றால் என்ன? அக்கறை, கருணை காட்டுதல் மற்றும் முடிந்த போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவுவது.. இதுதான் மனிதநேயத்தின் சாராம்சம். மனிதர்கள், விலங்குகள் என பலரும் அவ்வப்போது பல சிக்கலான சூழல்களில் மாட்டிக்கொள்கிறோம். அப்போது தன்னலம் கருதாமல் செய்யப்படும் உதவிதான் மனிதநேயத்தின் மிகப்பெரிய சான்றாக விளங்குகிறது. இதை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அப்படிப்பட்ட மற்றொரு வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் நாய் ஒன்று சிக்கித்தவிக்க, அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரையும் பணையும் வைத்து செய்யும் முயற்சியை காண முடிகின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் வாத்து! 

இறைவனாய் மாறி நாயை காப்பாற்றிய நாயகனின் வீடியோவை இங்கே காணலாம்: 

 

செங்குத்தான சரிவில் ஏற முடியாமல் தண்ணீர் தேக்கத்தில் சிக்கிய நாயை காப்பாற்ற ஒரு நபர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நீர்த்தேக்கத்தின் சுவரில் இறங்கிச் செல்வதை இந்த வைரல் வீடியோவில் காண முடிகின்றது. உதவிக்காக நாய் சத்தமாக அழுவதையும் கேட்க முடிகின்றது. வேகமாக ஓடும் நீரால் அச்சமுற்ற நாய் அதன் இடத்துலிருந்து நகராமல் அப்படியே நிற்கிறது. பின்னர் அந்த நபர் மீது நம்பிக்கை கொண்டு அது மெதுவாக தண்ணீரில் இறங்கி அந்த நபரை நோக்கி செல்கிறது. 

அந்த நபர் தனது கைகளை நீட்டி அந்த நாயை மெதுவாக தன் பிடிக்கு கொண்டு வருகிறார். பயத்தில் உள்ள அந்த நாய், மெதுவாக அந்த நபரை பிடித்தவாறு மேலே ஏறிச்செல்கிறது. சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, பயந்துபோன நாய் அந்த மனிதனைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறிச்செல்கிறது. மிக வேகமாக பாய்ந்துகொண்டிருக்கும் நீருக்கு மத்தியில் தன் உயிரையும் பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபரை பார்த்தால் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை வருகிறது. 

இந்த வீடியோவை Zindagi Gulzar Hai என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "நீங்கள் வாங்கிய டிகிரி ஒரு துண்டு காகிதம்தான். ஆனால், உண்மையான கல்வி உங்கள் நடத்தையால் தான் வெளிப்படுகிறது” என்று இந்த வீடியொவில் தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ சுமார் 150K வியூஸ்களையும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. இது வெகுவாக ரீட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘விலங்குகளும் மனிதர்களை போலத்தான்... அவற்றுக்கு ஆபத்து வந்தாலும் நாம் இப்படித்தான் உதவ வேண்டும்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கண்டு அசராத அசையாக்கரடி... வியக்க வைக்கும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News