திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
Funny Wedding Video: திருமணத்திற்குப் பிறகு மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டி ஆசீர்வாதம் பெறுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், மணமகன் மணமகளின் காலைத் தொட்டு வணங்குவதை நீங்கள் பார்த்ததுண்டா?
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில திருமணங்களில் நாம் நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கின்றன. இவை எப்போதும் நம் மனதில் நின்று விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் சமீபத்தில் ஒரு திருமணத்தில் நடந்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டி ஆசீர்வாதம் பெறுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், மணமகன் மணமகளின் காலைத் தொட்டு வணங்குவதை நீங்கள் பார்த்ததுண்டா? இப்படிப்பட்ட சடங்குகளும் நமது இந்திய திருமணங்களிலும் காணப்படுவதில்லை.
ஆனால் அப்படி ஒரு காட்சியும் சமீபத்தில் காணக்கிடைத்தது. இதுபோன்ற ஒரு வீடியோ இப்போது வெளிவந்துள்ளது. அதில் ஒரு மணமகன் திருமண மண்டபத்தில் மணமகளின் கால்களைத் தொடுகிறார். இந்த காட்சியை பார்த்தவர்கள் அப்படியே ஸ்தம்பித்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.
மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ
வித்தியாசமாக நடந்துகொண்ட மாப்பிள்ளை
திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் மக்கள் வெவ்வேறு விஷயங்களைப் பார்க்கிறார்கள். இவற்றின் மூலம் பல வித்தியாசமான அனுபவங்களை பெறுகிறார்கள்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், திருமணம் முடிந்தவுடன் மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. அப்போது திடீரென மணமகன் தனது மணமகளின் பாதங்களைத் தொடுகிறார்.
இந்த வித்தியாசமான காட்சியை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்தக் காணொளியில் காணப்படுவது போன்ற காட்சி பொதுவாகக் காணப்படுவதில்லை. திருமணத்துக்கு வந்தவர்கள் மட்டுமல்லாமல் வீடியோவில் இதை காண்பவர்களுக்கும் இது அதிசயமாகவே உள்ளது.
வித்தியாசமான இந்த திருமண வீடியோவை இங்கே காணலாம்:
அதிர்ச்சியடைந்த மணமகள்
மணமகன் மணமகளின் பாதங்களை திடீரென தொட்ட விதத்தைப் பார்த்து மணமகள் ஒரு கணம் வியந்தார். இந்த திருமண வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காதலின் மற்றொரு பெயர் மரியாதை என இந்த வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
இந்த மணமகனுக்கு மணமகளை எப்படி நடத்துவது என நன்றாக தெரிந்துள்ளது என ஒரு பயனர் எழுதியுள்ளார். இதை பார்த்த பல இணையவாசிகள், மணமகனின் உண்மையான அன்பையும், இந்த திருமணத்தால் அவர் அடைந்துள்ள மகிழ்ச்சியையும், அவர் தன் மனைவி மீது காட்டும் காதல் கலந்த மரியாதையையும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்கள் மற்றும் லைக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பலவித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR