மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ

Funny Marriage Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 02:40 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணம் என்பது மணமக்களின் வாழ்க்கையின் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒன்றாகும். இந்த நாளில், மணமக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெட்கப்படுவதில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். 

மேலும் படிக்க | செண்ட்-ஆஃப் கொடுத்த பள்ளி, குலுங்கி அழுத டீச்சர்: கண்கலங்கும் இணையவாசிகள் 

மணமகன் தனது மகிழ்ச்சியை, திருமண நாளன்று அட்டகாசமாய் வெளிப்படுத்திய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. மணமகன் மணமகளுக்கான ஒரு பாடலுக்கு பிரத்யேகமாக நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

வீடியோவில், மணமகன் படு கூலாக நடனமாடுவதையும் வெட்கத்தால் சிவந்த மணமகள் அதை பார்த்து மகிழ்வதையும் காண முடிகிறது. திருமணத்திற்கு வந்துள்ள விருந்தினர்கள் விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். சிறிது நேரம் கழித்து மணமகன் மணமகள் மீது ரூபாய் நோட்டுகளை மழையாய் பொழிவதையும் காண முடிகின்றது. ரூபாய் நோட்டுகளை அள்ள சில சிருவர்கள் ஓடி வருவதையும் நாம் வீடியோவில் காண்கிறோம். 

திருமணம் குறித்து மணமகனுக்கு உள்ள மகிழ்ச்சியை அவரது உற்சாகமான நடனமே எடுத்துக்காட்டுகிறது. இந்த வேடிக்கையான வீடியோவை அமித் குமார் சௌராசியா என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

மணமகனின் மாஸ் நடனத்தை இங்கு காணலாம்: 

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மணமகனின் மகிழ்ச்சியான நடனம் மற்றும் கலகலப்பான அணுகுமுறையை பார்த்து நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். கமெண்ட் செக்‌ஷனில் ஏகப்பட்ட சிரிப்பு எமோஜிகளை காண முடிகின்றது. 

“மணமகளை மகிழ்விக்க மணமகன் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | என்னடா இது சூனா பானாவுக்கு வந்த சோதனை - பந்தை கவ்வ திணறும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News