மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ

Funny Wedding Video: திருமணத்தில் மணமகன் அழுவதைப் பார்த்து, உறவினர்கள் அனைவரும் அவரை தேற்ற அவர் அருகில் சென்றனர். அவரது அன்பு அனைவரையும் உருக வைத்தது என்றே சொல்ல வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 06:23 PM IST
  • திருமண மண்டபத்துக்குள் வந்த மணமகள்.
  • தேம்பித் தேம்பி அழுத மணமகன்.
  • ஓடி வந்து தேற்றிய உறவினர்கள்.
மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பொதுவாக, ஒருவர் தனக்கு பிடித்த, தனது காதலன் / காதலியை மணக்கும்போது, உணர்ச்சிகளை அடக்க முடிவதில்லை. அவை வெளிப்படையாக வெளிவந்துவிடும். 

பல திருமண வீடியோக்களில், மணமகனோ அல்லது மணமகளோ திருமண மண்டபத்துக்கு வந்தவுடன் மற்றவர் தேம்பித் தேம்பி அழுவதை நாம் பார்த்துள்ளோம். பல முயற்சிகளுக்கு பிறகு தங்கள் திருமணம் தங்கள் மனதுக்கு பிடித்தவருடன் நடக்கிறது என்பதை அவர்களால் நம்ப முடிவதில்லை. 

தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவிலும் இதே போன்ற ஒரு காட்சி காணப்படுகின்றது. மணமகன் தனது மணமகளை பார்த்தவுடன் அழுவதை வீடியோவில் காண முடிகிறது. மணமகன் அழுவதைப் பார்த்து என்ன செய்வதென்று புரியாமல் நிற்கும் மணமகளையும் இதில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ 

மணப்பெண்ணை பார்த்து கதறி அழுத மாப்பிள்ளை

ஒரு பெண்ணை மணக்க தவமாய் தவமிருந்து, இறுதியாக அந்த பெண்ணே தனக்கு மணமகளாகும் போது, அந்த மணமகனுக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்க முடியாது. 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகனின் மனநிலையை நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது. மணமகன் அழுவதைப் பார்த்து, அவரது உறவினர்கள் அவரை தேற்றுகின்றனர். மணமகளும் தனது மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்படுகிறார். இப்படிப்பட்ட திருமணச் சூழலைக் கண்டு, விருந்தினர்களும் உணர்ச்சிப் பெருக்கினால் நிறைந்தனர். 

உணர்ச்சிவசப்பட்ட மணமகனின் வீடியோவை இங்கே காணலாம்:

மணமகனை தேற்றுவதில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் 

திருமணத்தில் மணமகன் அழுவதைப் பார்த்து, உறவினர்கள் அனைவரும் அவரை தேற்ற அவர் அருகில் சென்றனர். அவரது அன்பு அனைவரையும் உருக வைத்தது என்றே சொல்ல வேண்டும். தான் வருவதைப் பார்த்து கண் கலங்கிய மணமகனை பார்த்து மணமகளும் ஸ்தம்பித்து நிற்கிறார்.

இந்த வீடியோ rzmakeovers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | டிராக்டரில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய மணப்பெண்: மயங்கிப்போன இணையவாசிகள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News