வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 


சமீபத்தில் மற்றொரு திருமண விடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. இதை பார்த்தால் யாராலும் சிரிப்பை அடக்க முடியாது. இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இதை வேடிக்கையாக பார்த்து வருகிறார்கள். 


வீடியோவில் ஒரு திருமண நிகழ்ச்சியை காண முடிகின்றது. மணமகனும் மணமகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது திடீரென மணமகன் மணப்பெண்ணின் முகத்தில் கை வைக்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. அவர் மணப்பெண்ணின் முகத்தை தன் விரலால் தடவி பின் அந்த விரலை தன் பேண்டில் தடவுகிறார். அப்போதுதான் அவரது கிண்டல் புரிகிறது. மணமகளின் முகத்தில் இருந்த மேக் அப் அப்படியே அவர் கையில் ஒட்டிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்த மணமகனால் சிரிப்பை அடக்க முடியவில்லை, மணமகளோ வெட்கப்படுகிறார். 


திருமணங்களில் மணமக்கள் ஒப்பனை செய்துகொள்வது வழக்கம்தான். ஆனால், சில நேரங்களில் இது மிகவும் அதிகமாகிவிடுகின்றது. அதிகப்படியான ஒப்பனை இயற்கை அழகை கெடுத்து விசித்திரமான தோற்றத்தை அளிக்கின்றது. மேலும் அதிகப்படியான ஒப்பனை சரும பாதுகாப்பிற்கும் நல்லதல்ல. 


மேலும் படிக்க | Viral Video: ஷ்ஷப்பா... முடியல... பாடாய் படுத்தும் குட்டிகள்... போராடும் பெண் சிங்கம்!


ஒப்பனையால் வந்த வினையின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியொ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக (Social Media) தாளமான எக்ஸ் -இல் @saurmisra என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'ஓ ஆண்டவரே, ஜகன்னாதா, இங்கு என்ன நடக்கிறது?' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இது என்ன மாப்பிள்ளைக்கு வந்த சோதனை' என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். 'மிகவும் வேடிக்கையான வீடியோ' என்று மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | மிரட்டிய மிக்ஜாம் புயலில் மின்னிய மீட்புக்குழு: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ