Viral Video: ஷ்ஷப்பா... முடியல... பாடாய் படுத்தும் குட்டிகள்... போராடும் பெண் சிங்கம்!

Viral Video: காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமானது என்றால் மிகையில்லை. இயற்கையுடன் ஒன்றிய அதன் வாழ்க்கை மிகவும் அழகானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2023, 06:59 PM IST
Viral Video: ஷ்ஷப்பா... முடியல... பாடாய் படுத்தும் குட்டிகள்... போராடும் பெண் சிங்கம்! title=

காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமானது என்றால் மிகையில்லை. இயற்கையுடன் ஒன்றிய அதன் வாழ்க்கை மிகவும் அழகானது. ஆச்சரியங்கள் நிறைந்தது.  வன வாழ்க்கை குறித்த காட்சிகள் அரிதானவை என்பதால் தான், காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன. அதிலும், சிங்கம், புலி, பாம்புகள் போன்றவற்றின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம் அதற்கென தனி ரசிகர் பட்ட்டாளம் உள்ளது. அந்த வீடியோவில், சிங்கம் ஒன்று தனது குட்டிகளுடன் படாபாடு படுவதை  முடிகிறது. குட்டிகளில் ஒன்று அபூர்வ வெள்ளை இனமாகும், இது தனது தாயைப் பின்தொடர்ந்து தனது உடன்பிறப்புகளுடன் ஓடி விளையாடி வேடிக்கையாக உள்ளது.

சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். சிங்கம் வனத்தின் ராஜா என்று அழைப்பக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், விலங்குகளை வேட்டையாடும் சிங்கத்திற்குள்ளும், தாயுள்ளம் இருக்கிறது அல்லவா. இங்கே இந்த தாய் சிங்கமும், தனது குட்டிகளை சமாளிக்க முடியாமல் போராடுகிறது தோன்றுகிறது. 

வனத்தில் சஃபாரி எனப்படும், வன பகுதியை சுற்றீ பார்க்க வந்த பயணிகள், வரிசையாக வாகனங்களில் நிற்கு காட்சியையும், வாகனங்களுக்கு இடையேயும்,  சாலையிலும் ஓடும் சிங்கக்குட்டிகளை சமாளிக்க முடியாமல் சினக்கம் போராடும் காட்சி இணையவாசிகளை மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

வைரலாகும் சிங்கம் வீடியோவை கீழே காணலாம்:

 

 

சில நாட்களுக்கு முன்னர் சிங்கம் மிகவும் ஜாலியாக வந்து விளையாடுவதை காட்டும் வீடியோ மிகவும் வைரலாகியது. சிங்கம் ஒன்று கடற்கரை ஒன்றில் ஜாலியாக பந்து விளையாடுவதை காணலாம். அளவில் பெரியதாக இருக்கும் பந்தினை, இங்கேயும் அங்கேயும் என ஓடி கட்டுப்படுத்தி, உற்சாகமாக பந்து விளையாடுகிறது. கடற்கரை காற்றினை ரசித்துக்கொண்டே, ஓடி விளையாடும் வீடியோ மிகவும் வைரலாகியது. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா

இதே போன்று, மனதிற்கு சந்தோஷம் தரும் ஒரு வீடியோவாக, சில நாட்களுக்கு முன், ஆண் மயில் ஒன்று, தனது காதலியை மயக்க அழகாக ஆடும் வீடியோ மிகவும் வைரலாகியது. வீடியோவில் காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, அழகிய நடனம் ஆடி அசத்துகிறது. ஆனால், ஏனோ, அந்த பெண் மயிலில் மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை போலிருக்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Figen @TheFigen_ என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதனை மறு பதிவிட்டு வருவதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனை கீழே உள்ள இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Trending News