வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமணங்களின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோ, சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது. இது காண்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதை பார்த்த பிறகு மாப்பிள்ளை மீது பரிதாபம்தான் ஏற்படுகின்றது. 


ஒரு திருமண விழாவின் போது பட்டாசு வெடித்ததால் மணமகன் ஒருவர் பீதியடைந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. திருமணத்தில் முக்கியமான நேரத்தில் இதுபோன்ற குறும்புகளை வேறு யார் செய்வார்கள்? நிச்சயமாக, நண்பர்கள்தான் செய்வார்கள். இங்கும் அப்படித்தான் நடந்துள்ளது. 


இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வைரலான வீடியோ, இந்திய பாரம்பரிய உடையில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அவரை வைத்து அவரது நண்பர்கள் ஒரு குறும்புத்தனத்தை திட்டமிட்டுள்ளது பாவம் அவருக்குத் தெரியாது. அவர் மணமகளுக்கு மாலை அணிவிக்க முயலும் தருணத்தில், ஒரு பெரிய வெடி சத்தம் காற்றை நிரப்புகிறது. மேலும் இதனால் மணமகன் பீதியடைவதையும் காண முடிகின்றது. ஆனால், திருமண விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணும் போது, அவர் வெடி சத்தத்தை துப்பாக்கிச் சூட்டின் சத்தம் என நினைத்து பயந்துவிட்டாரோ என தோன்றுகிறது. 


மேலும் படிக்க | பயங்கர மலைப்பாம்புடன் பந்தாவா விளையாடும் சிறுமி: ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 


மிரண்டு போன மாப்பிள்ளையின் வீடியோவை இங்கே காணலாம்:



பல நிகழ்வுகள் மற்றும் விழாக்களுடன் கூடிய பல திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. எனினும், இந்த வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது. புது வாழ்வை தொடங்கும் பதட்டத்தில் இருக்கும் மாப்பிள்ளை வெடி சத்தத்தை கேட்டு பதறி விடுகிறார். ஆனால், தன்னைத் தவிர யாரும் அதற்கு பயப்படவில்லை என்பதை அறிந்தவுடன், அவருக்கு தர்மசங்கடமாகிப் போகின்றது. பின்னர் சமாளித்துகொண்டு அப்படி செய்தவர்களை பார்த்து கத்துகிறார். ஒரு வழியாக மாலை மாற்றும் சடங்கு நடந்துமுடிகின்றது. 


எனினும், இந்த வீடியோ நமக்கு பல பாடங்களையும் புகட்டுகின்றது. திருமணம் போன்ற பொது நிகழ்ச்சியின் போது பட்டாசுகள் போன்ற வெடிபொருட்களை அதிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதை வீடியோ நமக்கு நினைவூட்டுகிறது. 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் _naughtyfamily என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | செங்குத்து மலையில் பனி சிறுத்தையின் மான் வேட்டை: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ