‘என்ன சிம்ரன் இது?’: வடிவேலு ஸ்டைலில் ‘ஷாக்’ ஆன மணமகன், வீடியோ வைரல்
Funny Wedding Video: மணமகளை பார்த்து ஷாக் ஆன மணமகனின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மணமகன் ஷாக் ஆக காரணம் என்ன?
வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன.
சமூக ஊடகங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள திருமண வீடியோ சற்று வித்தியாசமான வீடியோவாகும். இந்த வீடியோவில் காணப்படும் மாப்பிள்ளையின் ரியாக்ஷனைப் பார்த்தால் முதலில் ஆச்சரியமாக உள்ளது. தனது மணப்பெண்ணைப் பார்த்து மாப்பிள்ளை இப்படி ஏன் ரியாக்ட் செய்கிறார் என கேள்வி எழுகிறது. ஆனால், மாப்பிள்ளையின் ஆச்சர்யத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிந்தால் பின்னர் சிரிப்பை நிறுத்தமுடியாது. அப்படி என்னதான் நடந்தது என தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | ‘ஏம்மா..கல்யாணத்துல கூட டோரேமான் பாட்டா?’: கியூட் மணப்பெண்ணின் வைரல் வீடியோ
ஷாக் ஆன மாப்பிள்ளை
இந்த வீடியோவில், மணமகன் தனது மணமகளுக்காக ஆவலுடன் காத்திருப்பதைக் காண முடிகிறது. மணமகன் தனது மணமகளை திருமண உடயில் தேவதைப் போல காண காத்துக்கொண்டு இருகிறார். ஆனால் மணமகள் எதிரில் வந்தவுடன், மணமகன் அப்படியே ஷாக் ஆகி விடுகிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தால் விஷயம் புரியும்.
குறும்பு செய்த நண்பர்
மணமகனின் நண்பர் ஒருவர் வேடிக்கைக்காக ஒரு விளையாட்டை விளையாடி உள்ளார் என்பது வீடியோவை பார்த்த பிறகு தெரிகிறது. மணமகனின் நெருங்கிய நண்பர் அவருடன் ஒரு குறும்பு செய்யும் எண்ணத்தில் அழகாக அலங்கரித்துக்கொண்டு மணமகனின் முன்னால் வந்துவிடுகிறார். மணமகளின் அவதாரத்தில் தனது நண்பரைப் பார்த்தவுடன், மணமகன் ஷாக் ஆகிறார். பின்னர் சுதாரித்துக்கொண்டு சத்தமாக சிரிக்கத் தொடங்குகிறார். அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர். ஆனால், முதலில் மீசையுடன் மணமகளை கண்ட மாப்பிள்ளை ஒரு நிமிடம் அப்படியே பலமாக திகைத்துப்போகிறார்.
வீடியோ வைரலானது
இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் weddingwireindia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை பல முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். சிலர் கமெண்ட் செக்ஷனில் சிரிப்பு எமோஜிக்களை போட்டுள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ‘இப்படி ஒரு நண்பன் அனைவரது வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்’ என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | தொடர்ந்து வம்பிழுத்த நாய்க்கு பூனை கொடுத்த பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ