தொடர்ந்து வம்பிழுத்த நாய்க்கு பூனை கொடுத்த பதிலடி!

நாய் ஒன்று பூனையை எவ்வளவு தொந்தரவு செய்தும் அந்த பூனை அமைதியாக இருப்பதை பார்த்து நாய் சோர்ந்து போயி அந்த இடத்தை விட்டு செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 23, 2022, 07:36 AM IST
  • அமைதியாக இருக்கும் பூனையை தொந்தரவு செய்யும் நாய்.
  • எவ்வளவு தொந்தரவு செய்தாலும் அமைதி காக்கும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
தொடர்ந்து வம்பிழுத்த நாய்க்கு பூனை கொடுத்த பதிலடி! title=

நமது தினத்தை இனிமையாக மாற்றக்கூடிய பல விஷயங்கள் இணையத்தில் பரவி கிடக்கின்றன, தினம் தினம் நமது கவலைகளை நீக்கி நம்மை மகிழ்விக்கும் விதமான சம்பவங்களை கண்டு மகிழ்கிறோம்.  விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்பு வீடியோக்கள், மணமக்களின் வீடியோக்கள், சிலரின் தக் லைஃப் காட்சிகள் என நாம் ரசிக்கும்படியான பல வீடியோக்கள் நிரம்பி கிடக்கின்றன.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நாய் செய்யும் துன்புறுத்தலை பூனை அமைதியாக சகித்துக்கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் அந்த நாய் அமைதியாக சென்றுவிடுகிறது.  துஷ்டனை கண்டால் தூர விலகு என்கிற பழமொழிக்கேற்ப அந்த பூனை நாயை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இந்த வீடியோ யோக் என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு மெத்தையின் மீது இரண்டு பூனைகள் அமைந்தியாக அமர்ந்து கொண்டு இருக்கிறது, அதனருகில் தரையில் உயரமான நாய் ஒன்று நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த நாய் மெத்தையில் அமர்ந்திருக்கும் ஒரு பூனையை வம்பு இழுக்கிறது, அந்த பூனையை கடித்து இழுக்கிறது.  அந்த பூனை எதுவுமே செய்யாமல் அமர்ந்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் அந்த பூனையை, நாய் துன்புறுத்திக்கொண்டே இருக்க அந்த இரண்டு பூனைகளும் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாகவே நாய் செய்வதை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.  ஒரு கட்டத்தில் அந்த நாயால் போராட முடியாமல் சோர்வடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது.

 

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

இது பூனையின் அமைதிக்கு கிடைத்த வெற்றி என்று இணையவாசிகள் பலரும் பூனைக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.  இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News