கல்யாணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ட்ரோன்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய முறையில் ட்ரோன் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. இந்து மதக் கடவுளான ஹனுமான் போல் உள்ள ஆளில்லா விமானம் (Drone) பறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. ட்ரோன்களைப் பயன்படுத்தி பகவான் ஹனுமானை பறக்கச் செய்துள்ளனர். சில ட்ரோன் ஒன்றாக இணைக்கப்பட்டு ஹனுமான் போல் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவை சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூரில் வினால் குப்தா என்ற புகைப்படக் கலைஞர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தசரா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹனுமான்  பக்தர்களை ஆசீர்வதிப்பதை போல் வீடியோ உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க



இருப்பினும், மத நம்பிக்கையுடன் தொழில்நுட்பத்தை புகுத்தும் யோசனையை இது முதல் முறை அல்ல. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஹனுமான் ட்ரோனின் இதேபோன்ற குறிப்பிடத்தக்க காட்சி அந்த சமயத்தில் வைரல் ஆனது.  இந்த வீடியோ வைரலானவுடன், நெட்டிசன்கள் பலரும் வீடியோவிற்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.  ஒரு பயனர், தொழில்நுட்பம் நம்பிக்கையை சந்தித்தது. அறிவியலுக்கு நன்றி, நாம் இப்போது எதையும் செய்ய முடியும், ஹனுமான் கூட பறக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், நவீன ஹனுமான் ஜி, இது 21 ஆம் நூற்றாண்டு சிறப்பு என்று பதிவிட்டுள்ளார்.  இதற்கிடையில், நாடு முழுவதும் மக்கள் தசராவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். 


ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு இடங்களில் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தசரா கொண்டாடப்படுகிறது.  டெல்லி துவாரகாவில் உள்ள டிடிஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மறுபுறம், ஜனாதிபதி திரௌபதி முர்மு, டெல்லியில் உள்ள மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான செங்கோட்டை மைதானத்தில் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார், அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ