Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் குரங்கு வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். குரங்குகள் செய்யும் சேட்டைகளும், அவற்றின் வினோதமான செயல்களும் நம் மனங்களை கொள்ளைக்கொகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சமூக வலைதளங்களில் ஒரு நபருக்கும் குரங்கு ஒன்றுக்கும் நடக்கும் சண்டையின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதைப் பார்ப்பவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோவில் ஒரு நபரும் குரங்கும் பிஸ்கெட் பாக்கெட்டுக்காக அடித்துக்கொள்கிறார்கள்.


வைரலாகி வரும் இந்த வீடியோ மிருகக்காட்சிசாலையில் இருந்து எடுக்கப்பட்டது போல் தெரிகிறது, அங்கு கூண்டில் அடைக்கப்பட்டுள்ள குரங்கு ஒன்றை காண முடிகின்றது. அங்கு வரும் ஒரு நபர் குரங்குக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுக்கிறார். அந்த பிஸ்டெக் பாக்கெட்டை தன்னுடன் கூண்டுக்குள் எடுத்துச்செல்ல குரங்கு எண்ணும்போது, அந்த நபர் அதனிடமிருந்து அதை பிடுங்கிக்கொள்கிறார். இதை பார்க்கும் நமக்கு சிரிப்பு வருகிறது. 


அதன் பிறகு இருவரும் பிஸ்கெட் பாக்கெட்டுக்காக சண்டை போகுகிறார்கள். குரங்கு கையிலிருந்து அந்த நபர் பாக்கெட்டை பிடுங்குகிறார். மீண்டும் குரங்கு அவர் கையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டை பிடுங்குகிறது. இதை பார்க்க வீட்டில் இரு குழந்தைகள் சண்டை போட்டுக்கொள்வது போல உள்ளது.


மேலும் படிக்க | டவலுடன் கணவனிடம் சண்டை போடும் பெண்..பால்கனி எஸ்கேப் ஆகும் காதலன்! வைரல் வீடியாே..


ஒரு நபர் குரங்குடன் பிஸ்கெடுக்காக சண்டையிடும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @asemone_abii888 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | 210 கி.மீ தள்ளி இருந்தாலும் தேடி வந்து தாக்கிய மனைவி! வசமாக சிக்கிய கணவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ