viral video on Work From Home: வைரலாகும் சிறுமியின் வீடியோ
வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்கும் தன்னுடைய அம்மாவைப் போல 8 வயது சிறுமி ஒருவர் நடித்துக் காட்டும் வீடியோ உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பால் அலுவலகம், கல்வி என பல துறையில் பணி புரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே இயங்கத் தொடங்கிவிட்ட காலம் இது. வீட்டிலிருந்து வேலை செய்யும் அம்மாவைப் போல நடித்துக் காட்டும் செல்ல மகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இந்த வீடியோவை இதுவரை 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருகின்றனர்… அப்படி என்ன தான் அந்த சிறுமி சொன்னாள்? வைரல் வீடியோவைப் பாருங்கள்
கொலின் சுலிஸ் (Colleen Chulis) தனது மகள் அடெல்லின் (Adelle) இருக்கும் ஒரு வீடியோவை LinkedInஇல் வெளியிட்டார். வீட்டிலிருந்து வேலை செய்யும் தாயைப் போலவே செய்துக் காட்டும் மகளின் வீடியோ அது. தொலைபேசி அழைப்புகள், ஜூம் கூட்டங்களில் தன்னுடைய அம்மா எப்படி செயல்படுகிறார் என்றும், தனக்கு அம்மாவாக எப்படி நடந்துக் கொள்கிறார் என தாயை நகலெடுத்து நடித்துள்ளார் அந்த எட்டு வயது சுட்டிச் சிறுமி.
மூன்று மாதங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் லிங்க்ட்இனில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது அந்த வீடியோ.
"என் 8 வயது மகள் நேற்று இரவு என்னைப் போல நடித்துக் காட்டட்டுமா என்று கேட்டாள். அவள் என்ன செய்வாள் என்றே எனக்குத் தெரியாது. இதுதான் என் மகளின் முதல் மற்றும் ஒரேயொரு வீடியோ" என்று அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த கொலின் சுலிஸ், வீடியோவுடன் சேர்த்து பதிவிட்டிருக்கிறார்.
Also Read | மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்
தனது வீட்டு அலுவலகத்தின் மேசையில் உட்கார்ந்திருக்கும்போது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. கணினியின் கீபோர்டில் டைப் அடித்துக் கொண்டிருக்கும்போது மொபைல் போன் ஒலிக்கிறது. டைப் அடித்துக் கொண்டே போனை கையில் எடுத்து "ஹாய் ஜெனிபர்!" என்று கூறும் சிறுமி, அமைதியாக இருக்கும்படி கைநீட்டி சைகை காட்டுகிறார்.
"ஏய், அமைதியாக இருங்கள், போய் துணி போடுங்கள்" என்று சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்கிறார். அடிக்கடி குழந்தைகளைப் பார்த்து அதை செய், இதை செய் என்று சொல்லிக் கொண்டே, தொலைபேசியில் ஒரு திறமையான மேலாளரைப் போல பேசுகிறார். திரும்பி தனது குழந்தைகளிடமும் பேசும்போது மொபைலில் பேசுபவரிடம் ‘ஐ அம் சாரி’ என்று சொல்லவும் சிறுமி மறக்கவில்லை.
அடெல்லே தனது தொலைபேசி அழைப்பிற்கு இடையில் பல்வேறு பணிகளையும் செய்கிறார். போனில் பேசிக்கொண்டே அதை ஒரு நோட் பேடில் குறிப்பெடுத்துக் கொள்கிறார். அதோடு, கணினியில் தட்டச்சும் செய்கிறார். ”the dog is very crazy, yeah” என்றும் சொல்கிறார். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது கடினம் என்றும் சிறுமி சொல்கிறார்.
இந்த வீடியோவை LinkedIn-இல் தாய் பதிவிட்டார். அந்தப் பதிவு வைரலாகியது, கோலினின் நிலைமை தங்களைப் போலவே இருப்பதாக பல பெற்றோர்கள் பதிவிட்டுள்ளனர்.
"இது சத்தியமானஉண்மை" என்று ஒரு பயனர் எழுதினார், மற்றொருவர், "இது நம்மில் பலருக்கு நடைபெறும் உண்மையான சம்பவம்!" என்று எழுதியுள்ளார்.
"ஒரு தாயின் வேலை எவ்வளவு கடினமானது என்பதை இது காட்டுகிறது" என்று மற்றுமொரு பயனர் இந்த வீடியோவிற்கு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
Also Read | Toll Plaza Video: சுங்கச்சாவடியில் நடந்த சம்வம் வீடியோவை பகிர்ந்த போலீசார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR