Viral Video: அசந்த நேரம் பார்த்து ஐஸ்கிரீமை சுவைத்த கில்லாடி பறவை!
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது.
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும்.
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. தினம் தினம் வைரலாகும் வீடியோக்கள் நமக்கு சிறந்த தகவல்களை வழங்குவதோடு மட்டுமின்றி, பொழுதுபோக்கு மற்றும் மன அழுத்தத்தை போக்கும் மாமருந்தாகவும் இருக்கின்றன.
அந்த வகையில், பெண்மணி ஒருவர் கடற்கரை ஓரத்தில் ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்த நிலையில், அதனை சமயம் பார்த்து கொத்தி சுவைக்கும் ஒரு பறவையின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பறவை ஒன்று வானில் பறந்து கொண்டே ஐஸ்கிரீமை அபேஸ் செய்த காட்சி இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
அதே சமயம், சில மாதங்களுக்கு முன் பறவைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வீடியோ மிகவும் வைரலாகியது. இலைகளை குடையாக பயன்படுத்திக் கொண்டு, மழையிலிருந்து, வெயிலில் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் அந்த சின்னஞ்சிறிய பறவைகள், நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சின்னஞ்சிறிய பறவை ஒன்று தனது அலகின் இலையை ஸ்டைலாக பிடித்துக் கொண்டு குடை போல் தன்னை வெயிலில் இருந்தும், மழையில் இருந்து காத்துக் கொள்வதைக் காணலாம் இது பார்ப்பவரை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். சின்னஞ்சிறிய பறவையின் மூளை இத்தனை வேலை செய்கிறதா என நினைக்கத் தான் தோன்றுகிறது.வைரலாகும் அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்!
சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே மிகவும்வைரல் ஆகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், சில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எனினும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் ரசிகரிகளை பெரிதும் ஈர்க்கின்றன என்றால் மிகையிலை.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ