Viral Video: கத்துக்குட்டின்னா இது தானா... புழுவை பிடிக்க தெரியாமல் தவிக்கும் பறவைக் குஞ்சு..!

Viral Video of Baby Bird: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2023, 09:59 AM IST
  • புழுவை பிடித்து சாப்பிடத் தெரியாமல் தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் வீடியோ.
  • புழுவிற்கு பிடித்த நல்ல நேரம் என தான் கூற வேண்டும்.
  • இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது.
Viral Video: கத்துக்குட்டின்னா இது தானா... புழுவை பிடிக்க தெரியாமல் தவிக்கும் பறவைக் குஞ்சு..! title=

அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. 

அந்த வகையில், புழுவை பிடித்து சாப்பிடத் தெரியாமல் தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் வீடியோ வைரலாகியுள்ளது. குஞ்சாக இருக்கும் போது, தாய் பறவை உணவை கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயைத் திறந்தால் போதும். அப்படி வலர்ந்து ஒரு பறவைக் குஞ்சிற்கு பாவம், புழுவை பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல், வாயை திறந்த படி அதன் பின்னே ஓடுகிறது. புழுவிற்கு பிடித்த நல்ல நேரம் என தான் கூற வேண்டும்.  தான் பசியாற அதனை பிடித்து சாப்பிட வேண்டும் என தெரியாததால், தவிக்கும் பறவைக் குஞ்சை பார்த்து நெட்டிசன்கள் பரிதாபபட்டனர்.

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

அதே சமயம், சில பறவைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வீடியோ மிகவும் வைரலாகியது. இலைகளை குடையாக பயன்படுத்திக் கொண்டு, மழையிலிருந்து, வெயிலில் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் அந்த சின்னஞ்சிறிய பறவைகள், நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சின்னஞ்சிறிய பறவை ஒன்று தனது அலகின் இலையை ஸ்டைலாக பிடித்துக் கொண்டு குடை போல் தன்னை வெயிலில் இருந்தும், மழையில் இருந்து காத்துக் கொள்வதைக் காணலாம் இது பார்ப்பவரை நிச்சயம்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். சின்னஞ்சிறிய பறவையின் மூளை இத்தனை வேலை செய்கிறதா என நினைக்கத் தான் தோன்றுகிறது.வைரலாகும் அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்!

அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே மிகவும்வைரல் ஆகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், சில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எனினும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் ரசிகரிகளை பெரிதும் ஈர்க்கின்றன என்றால் மிகையிலை.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News