புதுடெல்லி: அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியப் பெண் கமலா ஹாரிஸ். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கருப்பு மற்றும் தெற்காசியப் பெண். கமலா ஹாரீசுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரீசின் அனிமேஷன் பதிப்பு, அவரது ஆளுமைக்கு மிகவும் நியாயம் செய்திருப்பதாக சிலாகிக்கப்படுகிறது. அந்தப் படத்தில் 'கமலா ஹாரிஸ்- மேடம் துணை ஜனாதிபதி' எழுதப்பட்டிருந்தது.


பாராட்டுகளுக்கு எல்லாம் மகுடம் வைத்தது போல், பிரபலமான தொலைகாட்சி சேனலான காட்டூன் நெட்வர்க் பிரத்யேகமான முறையில் துணை அதிபருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.



அமெரிக்காவின் துணைத் தலைவரான முதல் பெண்ணை வாழ்த்துவதற்காக, கார்ட்டூன் நெட்வொர்க் தனது பிரபல Powerpuff கேர்ள் என்ற கதாபாத்திரத்தை கமலா ஹாரிஸைப் போல் சித்தரித்துள்ளது. 
கமலா ஹாரிசுக்கு பாராட்டு கார்ட்டூன் நெட்வொர்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்க்கு மூலம், கமலாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர், Powerpuff பெண்ணின் பதிப்பை அவருக்கு உரித்தாக்கிவிட்டது. வெள்ளை காலணிகளுடன் கடற்படை சீருடையின் அடர் நீல நிற உடையும், ஆடையில் இணைக்கப்பட்ட அமெரிக்க பேட்ஜும் அணிந்த Powerpuff கேர்ள் இவர். 
அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரீசின் அனிமேஷன் பதிப்பு, அவரது ஆளுமைக்கு மிகவும் நியாயம் செய்திருப்பதாக சிலாகிக்கப்படுகிறது. அந்தப் படத்தில் 'கமலா ஹாரிஸ்- மேடம் துணை ஜனாதிபதி' எழுதப்பட்டிருந்தது.ட்விட்டர் இடுகையில் ஒரு குறுகிய விளக்கம் இருந்தபோதிலும், நெட்வொர்க்கின் இன்ஸ்டாகிராம் இடுகை விரிவானதாக இருக்கிறது. “And just like that, she spoke…. என்று தொடங்கி, Thank you for being an inspiration for girls everywhere” என்று எழுதியுள்ளது.  


இந்த இடுகை இணையம் முழுவதும் பரவலாக பகிரப்பட்டுள்ளது, நெட்டிசன்கள் அதை தங்கள் சமூக ஊடக சுயவிவரங்களில் பகிர்ந்துகொண்டு, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பவர்பப் பதிப்பைப் பற்றி அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைப் பற்றியும் எழுதுகின்றனர் 
நெட்டிசன்களிடமிருந்து சில எதிர்வினைகள் பலவிதம் என்றால், அதில் பவர்பஃப் கேர்ள் ஒரு விதம்.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR