உலகம் முழுவதும் உள்ள சில விமாநங்களை தவிற பொதுவாக அனைத்து விமாநங்களிலும் 13 என்ற எண் கொண்ட இருக்கை இருப்பது இல்லை அது ஏன்? Friday the 13th, 13B போன்ற பல்வேறு பேய் படங்களுக்கு 13 எண்ணை சூட்டியதற்கு என்னதான் காரணம்? பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் 13ஆம் எண் கொண்ட வீடு இருப்பது இல்லை என கூறுகிறார்கள் அதன் பின்னணி என்ன? இப்படி பல்வேறு கேள்விகள் எழும் நிலையில், 13 ஒரு துரதிருஷ்டமான எண் என உலக அளவில் மக்களால் நம்பப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் வரலாற்றை கேட்டால் இது உண்மையா அல்லது மூட நம்பிக்கையா என தோன்றலாம். அதாவது, இயேசு கிறிஸ்து தன்னுடன் 12 சீடர்கள் உட்பட உணவு உட்கொண்டபோது 13வது சீடராக இருந்த யூதாசு இயேசுவை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார் என்பது வரலாறு. அந்த இரவுதான் இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவாக அமைந்தது. 



மேலும் படிக்க | இறப்பை கணிக்கும் ஜாதகத்தின் எட்டாம் பாவகமும் கேதுவின் தாக்கமும்


இதனால் 13 என்கிற எண் துரதிருஷ்டமாக கருதும் நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் உருவாகி நாளடைவில் அது உலகம் முழுவதும் பரவியது. இந்த நம்பிக்கையை மேலும் வேரூன்ற செய்யும் வகையில் Friday the 13th, 13B போன்ற பல்வேறு திகில் திரைப்படங்களும் வெளியானதால் மக்கள் அதை உண்மை என நம்ப ஆரம்பித்து விட்டனர்.


அதனை தொடர்ந்து, விமாநங்களில் 13வது வரிசையில் இருக்கும் விமான இருக்கைகளை பயணிகள் யாரும் பதிவு செய்யாமல் புரக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் எழுந்த வியாபார நஷ்டத்தை தவிர்க்க விமான நிறுவனங்கள் கையாண்ட உத்திதான் 13 எனும் எண்ணை அறவே தவிர்ப்பது என்பது. இந்த நம்பிக்கை பல்வேறு உலக நாடுகளிலும் வெவ்வேறு விதமாக மக்கள் பின்பற்றுகின்றனர். 


மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR