வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரணமே இல்லாமல் மற்றவர்களை துன்புறுத்தினால், பதிலடி கிடைப்பது நிச்சயம். மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், அனைவரும் அவரவர் எல்லைக்குள் இருப்பது மிக அவசியம். இது மீறப்பட்டால், அதற்கான விளைவையும் சந்திகக் வேண்டி வரும். இதை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 


இதில் ஒரு நபர் கட்டப்பட்ட நிலையில் தனது கொட்டகையில் இருக்கும் ஒரு குதிரையை சீண்டுவதை காண முடிகின்றது. எனினும், அவர் குதிரையை பாசத்தோடு தடவிக்கொடுக்கிறாரா அல்லது சீண்டுகிறாரா என்பது தெளிவாக இல்லை. ஆனால், அந்த குதிரைக்கு அவர் செய்யும் செயல் பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடாக குதிரை அந்த நபரை தாக்குகிறது. 


குதிரை அந்த நபருக்கு சரியான இடத்தில் அடி கொடுக்கிறது. அடி வாங்கிய நபரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் அங்கேயே குதிக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல தளங்களில் பகிரப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பைக்கில் புதுமண தம்பதிகள் இப்படியா செய்றது? வீடியோ வைரல் 


உதை கொடுத்த குதிரை 


சமூகவலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் குதிரை கொட்டகையில் சென்று, குதிரையை தொடத் தொடங்குவதை காண முடிகின்றது. அடுத்த நொடியே அந்த குதிரை அந்த நபரை கடுமையாக உதைத்து தாக்குகிறது. இந்த திடீர் தாக்குதலால், அந்த நபர் திக்குமுக்காடி விடுகிறார். வலி தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே குதிக்க ஆரம்பிக்கிறார். அவருடைய வேடிக்கையான செயல்களைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். வீடியொவை பார்க்கும்போது அந்த நபரின் செயல் குதிரைக்கு சற்றும் பிடிக்கவில்லை என தெரிகிறது.


வின்னர் வடிவேலு ஸ்டைலில் நபரை காயப்படுத்திய குதிரையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ bihari_boy_c என்ற கணக்கில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இந்த வேடிக்கையான வீடியோவை பார்த்த இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | Viral Video: பின்னிப் பிணையும் மூன்று பாம்புகள்; காதலா.. இல்லை குரோதமா! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ