Viral Wedding Video: முத்தம் கொடுத்த மணமகள்... நாணத்தில் முகம் சிவந்த மாப்பிள்ளை!

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களின் கேளிக்கை உலகில், பல திருமணம் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 27, 2022, 04:33 PM IST
  • திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • மணமகனை முத்தமிட்ட மணமகள்.
  • நாணத்தினால் சிவந்த மணமகன்.
 Viral Wedding Video: முத்தம் கொடுத்த மணமகள்... நாணத்தில் முகம் சிவந்த மாப்பிள்ளை! title=

திருமணங்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் நிறைய வெளியாகின்றன. ஏனெனில் இவை எப்பொழுதுமே ரசிக்க கூடியவை தான். திருமணங்களில், ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாதவை. சில நேரங்களில் மணமகனும், மணமகளும் செய்யும் சில குறும்புத்தனங்கள் அனைவரின் கவனத்தையும் வெலுவாக ஈர்க்கும். சில நேரங்களில் அவர்களின் உறவினர்கள் செய்யும் கோமாளித்தனங்கள், மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களும் திருமண நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யத்தை சேர்க்கும். அங்கிருக்கும் சூழ்நிலையே மாறி விடும். 

அத வகையில் தற்போது மணமகன் மணமகள் இடையிலான காதலை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருவரும் மணப் பந்தலில் அமர்ந்து திருமணம் தொடர்பான சடங்குகளை மேற்கொள்வதைக் காணலாம். மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணியும் சடங்கில், அவளது கழுத்தில் கயிறை கட்டுகிறார். அவ்வாறு, செய்யும் போது, தனது காதலை வெளிப்படுத்தும் வகையில், மணமகள், மாப்பிள்ளையின் கன்னத்தில் முத்தமிடுவதை வீடியோவில் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: இப்படியா பண்ணுவீங்க... வெட்கத்தினால் முகம் சிவந்த மணமகள்!

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்: 

தாலியில் கவனம் செலுத்திய மணமகன் எதிர்பாராத முத்தத்தால் அதிர்ச்சியடைந்து வெட்கப்படுவதை வீடியோவில் காணலாம். வீடியோ மிகவும் சுவாரஸ்யமானது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் witty_wedding இல் பதிவேற்றப்பட்டது. இந்த வைரலான வீடியோ இதுவரை 157 K பார்வைகள் மற்றும் பல விருப்பங்களையும் கருத்துகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News