கடிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடுவேன்: நொடியில் மானை விழுங்கிய மலைப்பாம்பு, வைரல் வீடியோ

Dangerous Python Swallows Deer: மலைப்பாம்பு ஒன்று பெரிய மானை விழுங்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2022, 09:20 AM IST
  • இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடுவேன்: நொடியில் மானை விழுங்கிய மலைப்பாம்பு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பூமியின் மிகப்பெரிய பாம்புகளில் பர்மிய மலைப்பாம்புகளும் ஒன்று என நேஷனல் ஜியோகிராஃபிக் கூறுகிறது. இந்த பாம்புகள் தங்கள் இரையை முதலில் பலவீனமாக்கி, அவற்றை சுருக்கி, இரையின் உடலை சுற்றிக்கொண்டு அவை மூச்சு முட்டும் வரை காத்திருந்து பலியாக்குகின்றன. இந்த பெரிய பாம்புகள் தங்கள் உணவை முழுவதுமாக விழுங்கி விடுகின்றன. இதற்கு வசதியாக இவற்றின் தாடைகளில் நீட்டப்பட்ட தசைநார்கள் உள்ளன.

மலைப்பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. ஆனால் பர்மிய மலைப்பாம்புகள் பெரிய பாம்புகள் மட்டுமல்ல, 18 அடி மற்றும் 200 பவுண்டுகளுக்கு மேல் வளரும் ஜீவன்களாகும். இந்த பாம்புகளால், பெரிய அளவிலான மான்களையும் எளிதாக விழுங்கி விடும். அப்படி விழுங்கும் பெரிய விலங்குகளை எளிதாக ஜீரணிக்க, மலைப்பாம்பின் இதயம் மற்றும் கல்லீரல் 40 சதவீதம் வளரும். 

மேலும் படிக்க | பல் தேய்க்கும்போது இந்த பந்தா தேவையா? பாம்புடன் சிறுமி அடிக்கும் லூட்டி, வைரல் வீடியோ 

சில நொடிகளில் பர்மிய மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'beautiful_new_pix' என்ற பக்கம் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று இறந்த மானை நொடிகளில் ஒரு பெரிய மடக்கில் விழுங்குவதை காண முடிகின்றது. மலைப்பாம்பு பாம்பை விழுங்கும்போது, ஒரு நபர் பாம்பின் உடலில் தட்டுவதையும் காண முடிகின்றது. இந்த வீடியோவுக்கு இதுவரை 619k வியூஸ்களும் 21k லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மலைப்பாம்பு மானை விழுங்கும் திகில் வீடியோவை இங்கே காணலாம்: 

மலைப்பாம்பு மானை விழுங்குவதைப் பார்த்து பெரும்பாலான பயனர்கள் திகைத்துப் போன நிலையில், சில புத்திசாலிப் பயனர்கள் அந்த வீடியோ தலைகீழாக உள்ளதாகவும், உண்மையில் பாம்பு மானை விழுங்கவில்லை, அதை தூக்கி எறிகிறது என்றும், மானை வெளியே எடுக்கவே அந்த நபரும் பாம்பின் மீது தட்டுவதாகவும் கூறிவருகின்றனர். 

"இந்த வீடியோ தலைகீழாக இருக்கிறது. அவற்றால் இவ்வளவு வேகமாக சாப்பிட முடியாது. அந்த நபர் பாம்பின் மேல் தட்டுகிறார். அது உண்மையில் பாம்பை மீண்டும் எழச் செய்யும்,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், இந்த வீடியோ நம்மை வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | Viral Video: பின்னிப் பிணையும் மூன்று பாம்புகள்; காதலா.. இல்லை குரோதமா! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News