இன்றைய வைரல் வீடியோ: இன்றைய காலக்கட்டம் மார்க்கெட்டிங் காலமாக மாறிவிட்டது. ஒரு பொருள் எவ்வளவு அதிகமாக முத்திரை குத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது விற்கப்படுகிறது. ஆரோக்கியமானதாக ஏதாவது விற்கப்பட்டால், மக்கள் அதை உடனடியாக வாங்குகிறார்கள். அந்த விஷயம் உண்மையில் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட மக்கள் வாங்க முன்வருகின்றனர். பிரவுன் பிரட்டிலும் இதேதான் நடக்கும். ஆம், இன்று பலர் பிரவுன் பிரட்டை ஆரோக்கியமானதாக கருதி சாப்பிடுகிறார்கள். மேலும் பலர் வெள்ளை பிரட் மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள். அதேசமயம் பிரவுன் பிரட் கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் இன்று பிரவுன் பிரட் தொழிற்சாலையின் இந்த வீடியோவை நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்னெஸ் உணர்வுள்ளவர்கள் எல்லாவற்றையும் ஆரோக்கியமாக சாப்பிடுவார்கள். நாம் எதை வாங்கினாலும், அதில் உள்ள பொருட்களைப் பார்த்தே தீர்மானிக்கிறோம். அதுமட்டுமின்றி மைதா, எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை முற்றிலும் தவிக்கின்றனர். அந்தவகையில் பெரும்பாளானோர் கடையில் பிரட் வாங்கப் சென்றால் வெள்ளை பிரட் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக பிரவுன் பிரட் மட்டுமே வாங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பிரவுன் பிரட் ஆரோக்கியமானது. மக்களின் இந்த தவறான எண்ணத்தை போக்க, பிரவுன் பிரட் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ கட்டாயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க


இப்படித்தான் நம்மை ஏமாற்றுகின்றனர்:
பகிரப்பட்ட இந்த வீடியோவில், பிரவுன் பிரட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? இது மாவில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். வீடியோவில், தொழிலாளர்கள் பிரவுன் பிரட் தயாரிக்க மைதா மாவை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதை தயாரிப்பதில், வெள்ளை பிரட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் முதல் மைதா வரை அனைத்தும் அடங்கும். ஒரு கூடுதல் பொருளையும் இதில் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறது அந்த மாவு. அதுதான் பழுப்பு நிறத்தின் பயன்பாடு. ஆம், ஆரோக்கியமானதாக கருதி நீங்கள் வாங்கும் பிரவுன் பிரட், வெள்ளை நிறத்தில் இருந்து பிரவுன் நிறமாக மாறி, அதில் வெறும் கலர் சேர்க்கப்படுகிறது.


தொழிற்சாலையில் பிரவுன் பிரட் தயாரிக்கப்படும் வீடியோவை இங்கே காணுங்கள்: 



வீடியோவை கண்டு மக்கள் கோபமடைந்தனர்:
வைரலான காணொளியைப் பார்த்து மக்கள் கோபப்படுவது இயல்பு. பலர் இதை உணரவே இல்லை. வீடியோவைப் பார்த்ததும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். இது வெறும் முட்டாள்தனம் என்று ஒருவர் எழுதினார். பிரவுன் ஆரோக்கியமானதாக கருதி சாப்பிட்டார். மாவில் கலர் கலந்து அல்கைன் தயாரிக்கப்படுகிறது. இதை விட வெள்ளை பிரட்டே சிறந்தது என்று ஒருவர் எழுதினார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ