இன்றைய வைரல் வீடியோ: தொழிற்சாலையில் அப்பளம் எப்படி தயாரிக்கப்படுகிறது: அப்பளம், பப்படம் என்று சிலர் அழைக்கும் இந்திய சிற்றுண்டிகளின் சூப்பர் ஹீரோ ஆகும். இந்த மெல்லிய மற்றும் மிருதுவான பப்படம் அனைத்து வகையான சுவைகளிலும் வருகின்றன, இதை நாம் பொரிக்கலாம், அடிப்பில் அப்படியே சுட்லாம் அல்லது மைக்ரோவேவ் செய்யலாம். ஒவ்வொரு இந்திய உணவிலும், பசியை உண்டாக்கும் உணவாக அல்லது காய் இல்லாத நேரத்தில் ஒரு விரைவான பக்க உணவாக நீங்கள் அவற்றைக் காணலாம். அவை சுவையானது மட்டுமல்ல, இந்திய மரபுகள் மற்றும் பண்டிகைகளின் ஒரு பகுதியாகும், அவை பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. நம்மில் பெரும்பாலோர் நம் பாட்டி அப்பளம் செய்வதைப் பார்த்து வளர்ந்தவர்கள். இப்போது சொல்லுங்கள், தொழிற்சாலைகளில் அப்பளங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? (how papads / Appalam are made in factories?) தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு வீடியோவில், அப்பளம் தொழிற்சாலைக்குள் நுழைவதை நாம் காணலாம். இது அனைத்தும் பருப்பு மாவு, உளுந்து மாவு, அரிசி மாவு அல்லது உருளைக்கிழங்கு போன்ற ஆரோக்கியமான பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அப்பள மாவின் தடிமனான தாள் மூலம் தொடங்குகிறது. சிலர் கலவையில் நிறைய மசாலாவை சேர்க்கிறார்கள். இப்போது இங்குதான் மந்திரம் நடக்கிறது. மாவு நல்ல பதத்தில் இருக்க சரியான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்து, தடிமனான மாவை ஒரு இயந்திரம் மூலம் சுழற்றப்படுகிறது. நன்கு பிசையப்பட்டு மிருதுவான மெல்லிய தாள்களை உருவாக்குகிறது. மாவின் மெல்லிய அடுக்கு ஒரே மாதிரியான தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு வட்ட வடிவத்துடன் இருக்கும் ரோலிங் பின் பயன்படுத்தி இயந்திரம் மூலம் வெட்டப்படுகிறது. இந்த வழியில், ஒவ்வொரு அப்பளமும் ஒரே அளவு மற்றும் வடிவமாக மாறுகிறது.


மேலும் படிக்க | மடி மீது முதலை..கழுத்தில் பாம்பு..ஆபத்துடன் விளையாடும் சிறுவன்! வைரல் வீடியோ!


தொழிற்சாலையில் அப்பளம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை இந்த வீடியோவில் காணுங்கள்:



இப்போது அப்பளத்தை  உலர வைக்கப்படுகிறது. பொதுவாக பாரம்பரிய முறையில், இந்த அனைத்து அப்பளங்களும் சூரிய கதிரொளியில் வைக்கப்படும். ஆனால் தொழிற்சாலையில், அதே மிருதுவான பர்ஃபெக்ஷனுக்காக உயர் தொழில்நுட்ப உலர்த்தும் அறைகளுடன் கூடிய ஆடம்பரமான கன்வேயர் பெல்ட் அமைப்பு மூலம் காய வைக்கப்படுகிறது. சோதனையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு அவை மொறுமொறுப்பாக மாறியவுடன், அமைத்து அப்பளங்களும் பேக்கேஜிங் வரிசைக்கு செல்ல தயாராக உள்ளன. அவை வரிசைப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்டு, சீல் வைக்கப்படுகிறது.


வீட்டில் எப்படி அப்பளம் தயார் செய்வது?


தேவையான பொருட்கள்: 
உளுந்து – 1 கப் 
சோடா உப்பு – 1/2 ஸ்பூன் 
தூள் உப்பு – 1/2 ஸ்பூன் 
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்


செயல்முறை:
முதலில் உளுந்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் நைசாக அரைத்து வைத்திருக்கும், உளுந்த மாவை போட்டுக் கொள்ளவும், இதில் உப்பையும், சோடா உப்பையும் சேர்த்து முதலில் மாவோடு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் ஊற்றி மாவை பிசையவும். இப்போது உங்கள் கைகளில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெயை எடுத்து, மாவில் பரவலாக ஊற்றி, அந்த அப்பளம் மாவை மறுபடியும் பிசையவும். பின்னர் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை மாவு நன்றாக ஊறட்டும். 15 நிமிடங்கள் கழித்து, அப்பளம் மாவை எடுத்து மீண்டும் பிசைய தொடங்கவேண்டும். முதலில் இந்த அப்பள மாவினை, நம் வீட்டில் சப்பாத்திக்கு உருண்டை பிடிக்கும் அளவு, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த உருண்டை மாவை மெல்லிசாக தேய்த்துக் கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் அப்பளத்தை வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை, அப்பளத்தை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு காய வைத்தால் போதும்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 


மேலும் படிக்க | முட்டை பொரி சாப்பிடுபவர்கள் உடனே இந்த வீடியோவை பாருங்கள்.. அதிர்ச்சி தரலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ