சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்
Women Eating Soap Viral Video: ஒரு பெண் சோப்புக் கட்டியை சாப்பிடுவதைக் காட்டும் வைரலான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய வைரல் வீடியோ: சமீப காலமாக இணையத்தளத்தில் பல விசித்திர வீடியோக்கள் வெளியாகி வருவதால், இப்போது விசித்திரமான உணவு வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுவதில்லை. ஆனால் சோப்பு சாப்பிடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல் @21b_kolkata ஒரு பெண் தன் கையில் இரண்டு பொருட்களை வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. அவர் இடது கையில் ஒரு பாட்டில் லிக்விட் ஹேண்ட் வாஷ் வைத்திருக்கிறார், மற்றொரு கையில் ஒரு பிரபலமான பிராண்டின் லோகோ பொறிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற சோப்பை வைத்திருக்கிறார். "எந்த ப்ராடக்ட்டின் சுவை சிறந்தது?" என்று வீடியோவுக்குள் எழுதிருப்பதை காணலாம். அவர் முன்னோக்கி நகர்ந்து, சோப்பைக் கையில் எடுத்து கடித்து சாப்பிடுகிறார். மேலும் "எனக்கு சோப்பு தான் பிடிக்கும்" என்றும் பதிவிடுகிறார், அடுத்து அவர் மேஜையில் உள்ள சோப்பை கடிப்பதைப் காணலாம், அது உண்மையில் ஒரு கேக் என்பதை பிறகு தெரிகிறது.
வைரலான வீடியோ இதுவரை 2.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பலவிதமான கருத்துக்கள் வெளியானது. பலர் வீடியோவுக்கு லைக் செய்துள்ளது.
மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க
ஒரு பெண் சோப்பு போன்ற கேக்கை சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுசி தத்தா, பேக்கிங் செய்வதை விரும்பமாக கொண்டுள்ளார். உணவு பிரியர்களை கவரும் வகையில் விதவிதமான கேக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அச்சு அசலாக சோப்பு போல ஒரு கேக்கை தயார் செய்து அவர் சாப்பிட்டுள்ளார். காணொளியின் ஆரம்பத்தில் அனைவரும் சோப்பு சாப்பிடுவதாக நினைத்தனர். ஆனால் கடைசியில் வந்த ட்விஸ்டில் அனைவரும் உண்மை அறிந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வீடியோவை இங்கே காணுங்கள்:
மேலும் படிக்க | அழகிப்போட்டியில் ஜெயித்தா எப்படி இருக்கும்? வீடியோ வைரல்
க்ளீனிங் ஏஜென்ட் தீம் கேக் இணையத்தில் புயலை கிளப்புவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில், நுரையுடன் வாஷிங் ஸ்பாஞ்ச் போன்று இருந்த கேக் ஒன்று ஆன்லைனில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | ஜாலியா போட்டோவுக்கு போஸ் குடுக்க உங்களுக்கு நேரம் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ