இன்றைய வைரல் வீடியோ: தக்காளி சாஸ் ரொட்டி, பிரட் போன்ற உணவிற்கு சுவை சேர்க்க மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தற்போது சாதாரண நடுத்தர மக்கள் வீடு முதல் விவிஐபி வீடுகள் வரை அனைவரும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு எகிரிய தக்காளி விலையால் அதன் தயாரிக்கப்படும் விதத்தை பார்த்தால் கட்டாயம் நீங்கள் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். அதுமட்டுமின்றி அருவருப்பாகவும் இருக்கும். தற்போது இங்கே ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் தக்காளி சாஸ் தயாரிக்கும் முறையில் எப்படிப்பட்ட தக்காளி பயன்படுத்தப் படுகிறது என்பதை காணலாம். சாஸ் செய்யும் செயல்முறை வீடியோவானது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. வீடியோ வைரலானதை அடுத்து, இன்று முதல் தக்காளி சாஸ் சாப்பிடுவதை கட்டாயம் நீங்கள் நிறுத்திவிடுவீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தக்காளி சாஸ் செய்யும் முறையின் வீடியோ மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட தக்காளி அழுகிய தாக்காளிகளாகும். அழுகிய தக்காளியைப் பார்த்தால், தக்காளி சாஸ் என்ற பெயரில் நீங்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள்? இந்த தக்காளிகள் முழுமையாக அழுகியுள்ளதை நாம் இந்த வீடியோவில் காணலாம். அந்த தக்காளியில் பல பூச்சிகளை நாம் காணலாம். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரின் எதிர்வினைகள் உள்ளன.


மேலும் படிக்க | சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்


தொழிற்சாலையில் தக்காளி சாஸ் தயாரிக்கப்படும் வீடியோவை இங்கே காணுங்கள்: 



இந்த தக்காளி சாஸ் எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது?
தற்போது இந்த தக்காளி சாஸ் எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்பது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் தெளிவாக தெரியவில்லை. வீடியோவில் காட்டப்பட்டுள்ள அனைத்து தக்காளிகளும் அழுகி இருக்கிறது, இதில் ஆச்சரியூட்டும் விஷயம் என்னவென்றால் இந்த அழுகிய தக்காளிகள் தான் சாஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. சாஸ் தயாரிப்பில் அழுகிய தக்காளியைப் பயன்படுத்துவது குறித்து சமூக ஊடகப் பயனர்களால் பல கருத்துக்கள் கூறி வருகின்றனர். 


வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்து சாப்பிடலாம்:
எனவே இது போன்ற தரமில்லாத தக்காளி சாஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இனி வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுங்கள். இப்போது வீட்டில் எவ்வாறு ஆரோக்கியமான தக்காளி சாஸ் தயார் செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


தக்காளி - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:


முதலில் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும், பிறகு நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து வேக விடவும். பின்னர் வெந்த தக்காளியை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும்.


மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ