வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் சமூக ஊடகங்களின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். பாம்புகளின் பல வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றை பயனர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். 


தற்போதும் மிகப்பெரிய மலைப்பாம்பு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பாம்புகளுடன் விளையாடி வீடியோ எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள். சில சமயங்களில்  பாம்புகள், சில சமயங்களில் முதலை என்று வீடியோ எடுக்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகம். இதில் சில விளையாட்டாகவே இருக்க, சில விளையாட்டுகள் விபரீதமாகி விடுகின்றன. அதேபோல், பாம்பு பிடிக்கும் நபர் விஷப்பாம்பு கடித்து இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. ராட்சத மலைப்பாம்பை பிடித்த இளைஞன் கடைசியில் அதனால் கடிபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. 


பயங்கரமான மலைப்பாம்பு போன்ற பாம்புகளை கண்டால் நம்மில் பெரும்பாலானோர் ஓடு விடுவதுதான் வழக்கம். ஆனால், ஒரு இளைஞர் மலைப்பாம்புடன் சண்டையிட்டு விளையாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. சிறிது நேரம் பாம்பும் நன்றாக விளையாடியது. இளைஞனின் கை, கழுத்து என அனைத்து இடங்களிலும் பரவி அது இளைஞனுக்கு ஈடாக வேடிக்கை செய்தது. 


மேலும் படிக்க | சண்டைக்கார சேவலின் சேவச்சண்டை வீடியோ! தலைதெறித்து ஓடும் நாய்க்குட்டி


ஆனால், சிறிது நேரத்தில் பாம்புக்கு மூட் மாறியது. பாம்பு இளைஞனின் கழுத்தை சுற்றிக்கொண்டு அவரது கையை கடித்து குதறியது வீடியோவில் காணப்படுகின்றது. மலைப்பாம்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. பாம்பின் கடி இளைஞனுக்கு வலியை அளிக்கிறது. ஆனால், அச்சமில்லாமல் சிறித்துக்கொண்டே இளைஞன் பேசுவதால், அந்த பாம்பின் விஷன் முன்னரே நீக்கப்பட்டிருக்கக்கூடும் என தோன்றுகிறது.


மலைப்பாம்பின் பகீர் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த மலைப்பாம்பின் வீடியோ The Real Tarzan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மலைப்பாம்பின் வீடியோவைப் பகிரும் போது, ​​"இது பாம்பின் தவறு அல்ல" என்று தலைப்பில் இளைஞர் எழுதியுள்ளார். ‘இந்தப் பாம்பை நான் விட்டிருக்க வேண்டும். அத்தகைய பாம்புகள் ஆபத்தானவை. இந்த பாம்புகளின் பிடி மிகவும் வலுவானது. சிறிய தவறு செய்தாலும் உயிருக்கு ஆபத்தை வரக்கூடும். இது ஸ்க்ரப் பைதான். இந்த பாம்புகளை கையாளும் போது கவனமாக இருக்கவும். ஏனெனில் இந்த பாம்புகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.’ என்று அவர் எழுதியுள்ளார்.


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | உலகமகா நடிப்புடா சாமி: பாம்பின் மரண நாடகம், வியப்பில் நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ