தண்ணீருக்குள் டூயட் போடும் வாத்துகள்: ரசிக்க வைக்கும் வீடியோ

வாத்துகள் இரண்டு தண்ணீருக்குள் கலகலப்பாக நடனமாடி மகிழும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வாத்துகளின் நடனம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2023, 07:02 PM IST
தண்ணீருக்குள் டூயட் போடும் வாத்துகள்: ரசிக்க வைக்கும் வீடியோ  title=

மனிதர்களைப்போலவே பறவைகளிடமும் குறும்புத் தனங்களும், விளையாட்டு குணமும் நிறையவே இருக்கிறது. மனிதர்களின் நடமாட்டம் இருந்தால் அப்பகுதியில் இருக்கும் பறவைகளும் விலங்குகளும் அதனை வெளிக்காட்டுவதில்லை. நீங்கள் வருவதை அவை அறியாதபட்சத்தில் பறவை மற்றும் விலங்குகளின் சேட்டைகளை நீங்கள் காணலாம். இது அரிதாகவே யாருடைய பார்வையிலாவது படும். ஆனால், கேமராவின் வருகைக்குப் பிறகு விலங்குகளின் சுட்டித் தனங்களையை அதிகமாக நம்மால் பார்க்க முடிகிறது. 

மேலும் படிக்க | Video: மறுபிறவி கொடுத்த இளைஞர்... நண்பனாக மாறிய நாரை - பறவையின் பாசப்பிணைப்பு!

ஸ்மார்ட்போன் யுகத்தில் உலகின் ஏதோ ஒருமூலையில் விலங்கு செய்யும் குறும்புத் தனங்கள், நொடிப்பொழுதில் வீட்டில் இருந்தவாறே நம்மிடம் இருக்கும் கையடக்கக் கருவிக்குள் பார்த்துக் கொள்கிறோம். அப்படியான வீடியோ ஒன்று யூடியூப் வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. Bird life international என்ற பக்கத்தில் இருக்கும் வீடியோவில் ஏரி ஒன்றில் இருக்கும் வாத்துகள் செய்யும் சேட்டை அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், தண்ணீரில் நீந்திச் செல்லும் வாத்து ஒன்று தலையை மடக்கி, போக்கு காட்டுகிறது. நீங்கள் பார்த்தால் இது என்ன? புதுமையான ஸ்டைலில் வாத்து தலையை மடக்கி வைக்கிறது என நினைப்பீர்கள். பின்னர் தண்ணீருக்குள் மூழ்கி எழும் வாத்துடன், இன்னொரு வாத்தும் சேர்ந்து கொள்கிறது. மகிழ்ச்சியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் இரண்டு வாத்துகளும் ஜோடி சேர்ந்து அழகான நடனத்தை அரங்கேற்றுகின்றன. தண்ணீரில் மிந்தது கொண்டு, கழுத்துகளை மடக்கியவாறு நீர்மேல் குதித்து குதித்து செய்யும் சேட்டை காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | Diamond Beach: கோல்ட்ன் பீச் சென்னையில்! வைரம் கொட்டிக்கிடக்கும் கடற்கரை எங்கு? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News