வைரல் வீடியோ: புத்திசாலித்தனம் என்பது வாழ்வின் அடிப்படை, அறிவும் சாதுர்யமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொதுவானது. புத்திசாலி என்று சொல்லிக் கொள்வதிலோ வார்த்தை ஜாலங்களிலோ மட்டும் அறிவு வெளிப்படுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரியான சந்தர்ப்பத்தில் வெளிப்படும் இயல்பான செய்கைகள் மூலமே ஒருவரின் புத்திசாலித்தனமும், சமயோஜிதமும் வெளிப்படுகிறது. உண்மையில் உலகில் பெரும்பான்மையானவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்பட வாய்ப்பு கிடைப்பதில்லை.


சரி, புத்திசாலித்தனம், சமயோஜிதம் என்பவை அறிவார்ந்த செய்கைகள் என்றாலும், அவற்றிலும் நக்கல் நையாண்டி கலந்தும் இருக்கும். புத்திசாலித்தனமும் விவேகமும், நகைச்சுவை மற்றும் குறும்புடன் கைகோர்த்தால் அனைவரின் முகத்திலும் புன்னகை பூக்கும்.


மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு


சமூக ஊடகங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் சில புன்னகையை மட்டும் பூக்க வைப்பதில்லை, நம்மை சிந்திக்கவும் தூண்டுகின்றன. அதில் பல விலங்குகளின் வீடியோக்களாகவும், தொழில்நுட்ப மற்றும் பயண வீடியோக்களாகவும் இருக்கின்றன.


வைரலாகும் விலங்குகள் வீடியோக்களில் பலவிதமான விலங்குகளின் குறும்புகளும், சேட்டைகளும் வெளிப்படுகின்றன. இதுபோன்ற விஷயங்களை பார்ப்பது அபூர்வம் என்பதால், நேரில் பார்த்தவர்கள் அவற்றை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர். அவை உடனடியாக வைரலாகின்றன


அண்மையில் கழுதைகள் தடை தாண்டி குதிக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட உடனே மில்லியன் கணக்கானவர்கள் பார்த்து ரசித்து லைக் செய்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ


அப்படி என்ன வித்தியாசமாய் அந்த வீடியோவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கழுதைகள் வரிசையாக நடந்து செல்கின்றன. அவற்றின் பாதையில் குறுக்கே ஒரு கட்டை வைக்கப்பட்டுள்ளது. வரிசைக் கிரமமாக வரும் கழுதைகள் அந்த கட்டையை தாண்டி குதித்துச் செல்கின்றன.


அதில் ஒரு கழுதை தன்னுடைய முறை வந்ததும், கட்டை அருகே வந்து நின்று ஒரு விநாடி நிற்கிறது. அதன்பிறகு அது என்ன செய்தது என்பது தான் அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. வைரலாகும் கழுதையின் வீடியோ இதோ... 



ஆச்சரியமாக இருக்கிறதா? முதலில் செல்லும் கழுதை, பாதையில் தடையாய் வைக்கப்பட்டிருக்கும் கட்டையைத் தாண்டி குதிக்கிறது.


அடுத்து வரும் விலங்கு, வேறு வழி இருக்கிறதா என்று ஒரு பக்கமாக சென்று பார்த்துவிட்டு, முதலில் சென்ற கழுதையைப் போலவே கட்டையை தாண்டி குதிக்கிறது.


மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்


மூன்றாவதாக வரும் கழுதை, தடுப்புக்கு முன் வந்ததும் சில நொடிகல் நிற்கிறது. பிறகு கட்டைக்கு அருகில் சென்று நோட்டம் பார்க்கிறது. பிறகு தனது வலப்புறமாக சென்று தடுப்பு வைத்திருக்கும் கட்டையை கீழே தள்ளிவிடுகிறது.


கட்டை கீழே விழுந்ததும் அது மீண்டும் பாதையின் நடுவில் வந்து கட்டையை பார்த்தபடியே நடந்து செல்கிறது. அதற்கு அடுத்துவந்த கழுதை, கீழே விழுந்து கிடக்கும் கட்டையிடம் வந்ததும் ஒரு நொடி பார்த்த பிறகு அதை கடக்கிறது.


ஒரு சிறிய செய்கைதான். ஆனால், அது ஒருவரின் புத்திசாலித்தனத்தை கண நேரத்தில் காட்டுகிறது. நான் வித்தியாசமானவன் என்று யாரும் வாய் வார்த்தையாக சொல்ல வேண்டாம், அவரவர் செயல்களே நிரூபிக்கும் என்பதற்கு இந்த வீடியோவை விட வேறு உதாரணம் வேண்டுமா?


வாழ்க்கையின் இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையும், வித்தியாசமான வீடியோக்களையும் பதிவேற்றுவதில் பிரபலமான @buitengebieden என்ற டிவிட்டர் பக்கத்தில் இருந்து இந்த புத்திசாலி கழுதையின் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR