கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 207 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 75பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌சே தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.



இந்நிலையில் கொழும்பு சென்றிருந்த ராதிகா சரத்குமார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சின்னமான் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.