சிறிய கண்களின் நன்மைகள் வைரல் வீடியோ: நவீன தொழில்நுட்பத்தால் தொலைதூரத்தில் இருப்பவர்களும் நம்முடன் நெருங்கியிருப்பதாக தோன்றும். அதிலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் பதிவுகளும் வீடியோக்களும் பொழுதுபோக்காகவும், பல விஷயங்களை கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் அண்மையில் சமூக ஊடகங்களில் நடைபெற்ற சுவராசியமான தேடல், வைரலாகிறது. நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்கின் மனைவியை நெட்டிசன்கள் கூகுளில் தேடினார்கள். அதற்கு காரணம் என்ன?


கடந்த வார தொடக்கத்தில், நாகாலாந்து உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சர் வடகிழக்கு இந்தியர்களின் "சிறிய கண்கள்" தொடர்பான கருத்துக்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். பொதுவாக சமூக ஊடகங்களி விலங்குகள் மற்றும் பாம்பு வீடியோக்கள் அதிகம் வைரலாகும்.


நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் தனது நகைச்சுவையால் மீண்டும் அனைவரின் கருத்தையும் ஈர்த்துள்ளார். வந்துள்ளார். "சிறிய கண்கள்" இருப்பதன் நன்மைகள் குறித்த அவரது கருத்துகள் சமூக ஊடக தளங்களில் வைரலான பிறகு, அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.


மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்


நாகாலாந்து பாஜக தலைவர் கூகுள் தேடுபொறியில் தனது மனைவியின் பெயரைத் தேடும் நெட்டிசன்களுக்கு நகைச்சுவையான பதிலை அளித்தார். அவரது நகைச்சுவை உணர்வு, அனைவராலும் பாராட்டப்பட்டு, வீடியோ வைரல் ஆகிறது.  


ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அதன் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ள டெம்ஜென் இம்னா அலோங், "இன்னும் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார். அவர் இந்த பதிவைபதிவிடப்பட்டது முதல், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் 3,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் மற்றும் 35,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது.



உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பதிவிட்ட நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், என்னைப் போல் முரட்டு சிங்கிளாக இருங்கள் என்று பதிவிட்டிர்ந்தார்.


திங்களன்று உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருக்குமாறும், குழந்தைப் பேறு குறித்த தகவலறிந்த தேர்வுகளை ஊக்குவிக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.


"அல்லது என்னைப் போல் தனிமையில் இருங்கள் மற்றும் ஒன்றாக இணைந்து நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே ஒற்றையர் இயக்கத்தில் சேருங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.



நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் 'சிறிய கண்கள்'
வடகிழக்கு மக்களின் "சிறிய கண்கள்" தொடர்பான பதிவுக்காக கடந்த வார தொடக்கத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாகாலாந்து உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சர், தனது நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்தார்.


வடகிழக்கு இந்தியர்களுக்கு சிறிய கண்கள் இருப்பதாக மக்கள் கூறுவதைப் பற்றி குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு சிறிய கண்கள் உள்ளன, ஆனால் அவர்களின் "பார்வை கூர்மையானது" என்று தெரிவித்திருந்தார். அதோடு, தனக்கு சிறிய கண்கள் இருப்பதால், சில நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் தொடர்ந்து நடக்கும்போது தன்னால் தூங்க முடியும் என்று கூறியிருந்தார்.


அதுமட்டுமல்ல, ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, "எனக்கு சிறிய கண்கள் இருப்பதால், குறைந்த அழுக்கு என் கண்களில் நுழைகிறது" என்றும் கூறினார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த டிவிட்டர் செய்தியை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பகிர்ந்து கொண்டார்.


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR